பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்வு பணிச்சுமை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க வேண்டும்

 
          பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளதால் உயர்நிலை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
            பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிகிறது. அத்தேர்வை, சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகின்றன.இந்த தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தற்போது மேற்கண்ட இரண்டு வகுப்புகளுக்கும் செய்முறைத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதற்கான மதிப்பீடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயார் செய்து, ஆன்லைன் மூலம் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

          பின்னர், எழுத்து தேர்வுகள் தொடங்கும் முன்னதாக தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்குதல், தேர்வு மையங்களில் பதிவுஎண் வாரியாக அறைகள் ஒதுக்கீடு செய்வது, கேள்வித்தாள் எடுத்து வந்து தேர்வு நேரத்தில் வினியோகம் செய்தல், விடைத்தாள்களை கட்டுப்போட்டு திருத்தும் மையங்களுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே செய்ய வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.அதனால் தலைமை ஆசிரியர்கள் பொதுத் தேர்வுக்கான பணிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல்களை அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தயாரித்து வருகின்றனர். 

            தேர்தல் பணிக்கு தலைமை ஆசிரியர்களை ஈடுபடுத்தினால் பள்ளித் தேர்வுப் பணிகள் பாதிக்கப்படும் என்று தலைமை ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவித்துள்ளனர்.மேலும், தேர்தல் பணியில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.இதையடுத்து தேர்வுத் துறை நடத்தும் தேர்வுக்கான ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்து பரிசீலனை செய்து தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தேர்தல் பணிகள் தொடர்பான கூட்டம் இன்று அந்தந்த தாலுக்காக்களில் நடக்கிறது. இந்த கூட்டத்திலும் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்க உள்ளனர்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive