Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கனமழை - பள்ளிகளுக்கு இன்று (31/10/2015) விடுமுறை

கனமழை காரணமாக இன்று 31/10/2015 சனிகிழமை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர் 

ஆய்வு கூட்டத்தில் அவதூறாக பேசிய அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கண்டித்து தலைமை ஆசிரியர்கள் வெளிநடப்பு

செய்யாறு  தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள் வாரியாக தேர்ச்சி  சதவிகிதம் குறித்து புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டு வந்தார். கூட்டம் மாலை வரை நடைபெற்றது. 

366 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு

இடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 366 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். இதற்கான இணைய வழி (ஆன்-லைன்) கலந்தாய்வு மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி

அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது. 

1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்காயருக்கு மாற்றம்

தமிழக தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் ஊதியத்தில், மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்புநிதி கணக்குகள், மாநில தகவல் மையத்தால் பராமரிக்கப்பட்டன.

CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.) முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in,​​ www.cbse.nic.in​ ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்!

நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ் பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை மொழி பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.

அறிவியில் வினாத்தாள் முறையில் மாற்றம்!

மாணவர்கள் சிந்தித்து, பதில் அளிக்கும் வகையில், அறிவியல் வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும், என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசினார். கரூர், புலியூர் செட்டிநாடு பொறியல் கல்லூரியில், தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:

மழலையர் பள்ளிகளுக்கு புதிய விதிமுறை வெளியிட உத்தரவு

தமிழகத்தில், அனுமதியின்றி, 700 மழலையர் பள்ளிகள் இயங்குவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர், மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றம், மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 

மூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் 'ஓகே!'

'மூன்று ஆண்டு சட்டப் படிப்பு ரத்து; பார் கவுன்சில் பொறுப்பை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு நவ., 2ல் வெளியீடு

தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள், நவ., 2ல் வெளியாகின்றன.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பரில் நடந்த தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், நவ., 2 மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. 

செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க சலுகை காலம் தபால் துறை அறிவிப்பு

தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ‘‘சுகன்யா சம்ரித்தி’’ என்ற செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் தொடங்கப்பட்ட 73 லட்சம் கணக்குகளில் 11 லட்சம் கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளன. இந்ததிட்டத்தில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 328 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

குரூப் -- 1 ஹால் டிக்கெட்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நவ., 8ம் தேதி நடத்தப்படும், குரூப் - 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

1590 PG, 6872 BT POST OCTOBER MONTH PAY ORDER




இரவு நேர இணையப் பயன்பாட்டில் 50 சதவீதம் காலையில் வைப்பு வைக்கப்படும்: ஏர்டெல் அறிவிப்பு

இணைய தள சேவைக்கான Data பயன்பாட்டில் இரண்டு முக்கிய சலுகைகளை பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு

'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கானஎழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

எம்.இ., எம்.ஆர்க். பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

       எம்.இ., எம்.ஆர்க். பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


வணிகவியல் தேர்வு அறிவிப்பு

          சென்னை, :அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், வணிகவியல் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு, 2016 பிப்ரவரியில் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


'டிச.12 வரை 12 வயது பெண் குழந்தைகளும் செல்வ மகள் திட்டத்தில் சேரலாம்'

          வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை 12 வயதான பெண் குழந்தைகளும் செல்வ மகள் திட்டத்தில் இணையலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.மேலும், செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 73 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.


November Month Diary...

                  ¤November Diary ¤
>7th Grievenc.e day
>RL Days -
02.11.15 Kallarai thirunal.
11.11.15 Diwali nombu
25.11.15 Thirukarthigai
>Holidays 10.11.15 Diwali
>CRC days
07.11.15 Primary CRC
14.11.15 Upper Primary CRC
>New Appointment Teachers- dist level 5 days training 02.11.15- 06.11.15
>VITAL training for upper Primary Teachers 05.11.15 & 06.11.15.

மனப்பாடம் செய்யாமல் பாடத்தை புரிந்து படித்து தேர்வு எழுதும் முறை: அரையாண்டு தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது

         ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளரும், அரசு தேர்வுத்துறை இயக்குனருமான தண்.வசுந்தராதேவி நேற்று கூறியதாவது:-

ஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது

முறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வுநடந்துள்ளது.


'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு'

'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கானஎழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர். 


கர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை

தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது.தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொருஅலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்களுக்கு, சுய விவர படிவங்கள் வழங்கி, விவரம் சேகரிக்கப்படுகிறது. 


ஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்!'

பள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது. 


தேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை!!

பொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

SSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் 16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளி -கவனிப்பாரா பள்ளிக் கல்வி செயலர்

தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 


தேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.


திறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை

தொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், இரண்டு ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம், 14ல் துவங்கியது.

பிள்ளைகளிடம் சேமிப்புப் பழக்கம்: பெற்றோர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

        பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட உலக சிக்கன நாள் செய்தியில் கூறியிருப்பதாவது:


TPF transfer to AG Office - GO & Director Proceedings

          G.O Ms : 169 - மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் - அரசாணை வெளியீடு& தொடக்ககல்வி இயக்குநர் செயல்முறைகள்


TET Teachers Seniority Regarding

        TET - ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும் - விதிகளை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

BRTE to BT CONVERSION

         இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் SGT to BT promotion கொடுப்பதற்கு முன் BRTE to BT CONVERSION நடத்த கோரி தடை உத்தரவு பெற தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்ககு வந்தது.இதில் அரசு தரப்பில் 4 வாரத்திற்குள் 500 BRTE to BT conversion நடத்த அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

Problems for APPOINTED TEACHERS with out TET( AFTER 23/8/2010)

       பயத்துடனும், மன உளைச்சலுடனும், கண்ணீருடனும் தினம் தினம் நாங்கள்... 23/08/2010 ற்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் எங்களின் கண்ணீர் சிந்தும் நாட்கள் தீர வழி தேடியே நீண்ட வாழ்க்கை  பயணம்.

‘கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி’ : மு.க.ஸ்டாலின்

‘கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி’

        சங்கராபுரத்தில் பட்டதாரி ரேணுகாதேவி பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில் அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். 2006ல் நிரந்தரம் செய்யப்பட்டனர். அதிமுக ஆட்சி வந்ததும் பணி நீக்கம் செய்து விட்டது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. பல ஆசிரியர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், என்றார்.


ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்

       'காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், அரசு ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒருங்கிணைந்த பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

"அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு வாரம்'

         திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அக்.26 முதல் 31ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரமாக கடைப்பிடிக்க ஆட்சியர் மு.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

"நெட்' தேர்ச்சி பெறாவிட்டால் உதவித் தொகை ரத்து: ஆய்வு செய்ய குழு அமைப்பு

      தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்குவதை நிறுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
 

EDUCATIONAL EXCELLENCE AWARD LETTER

குறைந்தது எம்.எட். சேர்க்கை: தேதியை நீட்டிக்கும் கல்லூரிகள்

       முதுநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பில் (எம்.எட்.) சேர்க்கை குறைந்ததைத் தொடர்ந்து, படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கும் நிலைக்கு கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன. தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் நிகழாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 450 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு

      இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 450 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இந்த ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

வினா வங்கி புத்தகம் விற்பனை தாமதம்

        பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் வரவுள்ளதால், வினா வங்கி விற்பனை தாமதமாகியுள்ளது.பள்ளி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நடப்பாண்டு பாடத்துடன், முந்தைய ஐந்து ஆண்டு பொதுத் தேர்வு மற்றும் தனித்தேர்வு வினாத்தாள்களுக்கான விடைகளும் கற்றுத் தரப்படும். 

தெருவில் கிரிக்கெட் ஆடும் மாணவர் தேசிய அணிக்கு தேர்வாகலாம்

       தெருக்கள் மற்றும் மைதானங்களில், ஆக்ரோஷமாக கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடும் மாணவர்களை, தேசிய அணியில் இடம் பெற செய்ய, மத்திய அரசு புதிய, 'ஆன் லைன்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

சித்தா படிப்பில் 99 கூடுதல் இடம்

        சித்த மருத்துவ படிப்புகளுக்கு, கூடுதலாக, 99 இடங்கள் கிடைத்ததால், கலந்தாய்வு இரவு வரை நீடித்தது.தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவ கல்லுாரி கள், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, 1,099 இந்திய மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன.

போனஸ் 'ஸ்டிரைக்' அறிவிப்பு '108' ஊழியர் 40 பேர் 'டிஸ்மிஸ்'

         தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், ஜி.வி.கே., நிறுவனம், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்துகிறது; இதில், 3,500 ஊழியர்கள் உள்ளனர். தீபாவளிக்கு, 20 சதவீத போனஸ் தர, நிர்வாகம் மறுத்ததால், நவ., 8 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஊழியர்கள், 40 பேருக்கு, ஜி.வி.கே., நிறுவனம், 'டிஸ்மிஸ்' நோட்டீஸ் அளித்துள்ளது. 

எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு

         இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை, எஸ்.ஆர்.எம்., பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 2016ம் ஆண்டு படிப்பில் சேர, 'ஆன்லைன்' நுழைவுத் தேர்வு ஏப்ரலில் நடக்கிறது. 

பள்ளி குழந்தைகளுக்கு 'ஷூ': நடிகர் விஷால் அறிவிப்பு

        ஒரு, 'ஷூ' வாங்கினால், 1,000 'ஷூ'க்களை, குழந்தைகளுக்கு தானம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை, புதுப்பேட்டை, புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில், விஷால் நற்பணி மன்றம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. நடிகர் விஷால், இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் சார்பில் பூங்கோதை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தீபாவளி முதல் டெலிபோன் அழைப்புகளை செல்போனிலும் பெறலாம்

          பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வாடிக்கையாளர் ஒருவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டெலிபோன், செல்போன் இணைப்புகளை வைத்திருக்க வேண்டும். அவர்கள், இரவு நேரத்தில் வீடு அல்லது அலுவலகத்துக்கு வரும் டெலிபோன் அழைப்புகளை  செல்போனுக்கு வரும்படி மாற்றிக் கொள்ளலாம். 

உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை


உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை

  உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளும் இதே போல கோரிக்கை விடுத்து மனு செய்தன.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது வக்கீல்கள் வாதம் நடந்தது.
 

பள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித்துறை உத்தரவு

        தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் மூடப்பட்ட நிலையில் உள்ளதா என உறுதி செய்யவேண்டும்.


Seventh Pay Commission Likely To Allow Work From Home For Disabled, Women Employees



New Delhi: Seventh pay commission is likely to ask the government to consider allowing disabled and women central government employees to work from home.
The commission may recommend government to ask Information and Technology department, whether it is possible to have systems in placefor monitoring and supervising workbeing done remotely by disabled and women central government employees .“Allowing disabled and women central government employees a choice in where and how they work can increase employee loyalty and job satisfaction, and the government needs to apply it for a big win to boost their confidence, which will also give the productivity,” said a pay panel official.The studies revealed those disabledand women employees who have the option of working outside of the office also reported somewhat lower levels of stress and exhaustion. And studies have suggested that employees tend to get higher performance evaluations.

வாட்ஸ்அப்பில் அனுப்பும் மெசேஜ்களின் ரகசியத்துக்கு பாதுகாப்பு இல்லையா?



    செக்கோஸ்லாவாகியா நாட்டின் ப்ர்னோ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலமாக வாட்ஸ்அப்பில் ரகசியமான முறையில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் குறிப்புக்கள் எங்கேயோ உள்ள அதன் கணிப்பொறிகளில் பதிவு செய்யப்படும் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு புத்தகங்கள்; ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் ஏற்பாடு

         பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பாடத்துடன் நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு இந்தியாவில் முதல் முதலாக புத்தகம் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு உள்ளன. 
 

ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்

  • இணைய தள முகவரிக்கு செல்லவும்.

  • உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்,
  • தேடலை சொடுக்கவும்.
  • உங்கள் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி எண் இதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.

குழந்தைகள் விரும்பும் பள்ளிகளாக இன்றைய பள்ளிகள் இருக்கின்றனவா?

      யுனிசெப் நிறுவனம் சென்னையில் செயல்பட்டுவரும் சமூகக் கல்வி நிறுவனம் என்ற அமைப்புடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் குழந்தை நேயப் பள்ளிகளை உருவாக்கும் முனைப்புடன் சில செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. 

உலகிலேயே முதன் முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

       உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.999-க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.
 

Election 2016 - Teachers Detail Form

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக, ஆசிரியர் விவரம் கோரும் படிவம்....

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம்

         பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற உள்ளன. அதற்கான, வினாத்தாள் தயாரிக்கும் பணியை, தேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக கேள்விகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வினாத்தாள்கள் கடினமாக இருக்கும்படி அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.


2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதல்வர் தகவல்

      2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

சிறப்பு ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு

        ஆசிரியர் பட்டத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் சிறப்பு பட்டயம் பயின்றவர்கள் தங்களது சான்றிதழ் சரிபார்ப்பை புதன்கிழமை (அக்.28) செய்துகொள்ள வேண்டும்.

குரூப்-2 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

       தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி - 2-இல் (குரூப் 2) உள்ளடங்கிய பதவிகளை நிரப்பிட வேண்டி, தகுதியுடைய பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள்தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தல்

          சிவகங்கை: ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு பிறபணி விடுப்பு இன்றி, தற்செயல் விடுப்பு தான் வழங்க முடியும் என தலைமை ஆசிரியர்கள் கூறுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளி பட்டதாரி, முதுநிலை பட்டதாரி , இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்திற்குள் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கும். 
 

வாக்காளர் பெயர் சேர்ப்பு பணி எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல்

     சென்னை,: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பித்தவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையில் 'நெட்' தேர்வு பயிற்சி

       சென்னை :'நெட்' தேர்வு எழுத, சென்னை பல்கலை சார்பில், சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.கல்லுாரி பேராசிரியர் பணியில் சேர, பிஎச்.டி., உதவித்தொகை பெற, நெட் தேர்வில், முதுகலை பட்டதாரிகள் தேர்ச்சி பெற வேண்டும்; டிசம்பரில், இந்த தேர்வு நடக்கவுள்ளது.
 

குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன்.

        குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனின் ஆசிரியர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன்.
 

அனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

         பள்ளிகளில் விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

 

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு இன்று வெளியீடு

     பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு புதன்கிழமை (அக். 28) வெளியிடப்படுகிறது. இதை தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

தேசிய திறனாய்வு தேர்வு இன்று 'ஹால் டிக்கெட்'


       மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது.

தொழிற்கல்வி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு 31ல் உண்ணாவிரதம்

        தொழிற்கல்வி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு தலைவர் ஜனார்த்தனன் கூறியதாவது:தொழிற்கல்வி ஆசிரியர் தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம்; உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கவேண்டும்.
 

கணினி தகுதித்தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு

       தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்தும், கணினி தகுதித்தேர்வுக்கு, நவ., 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு:18 பேர் மதுரைக்கு மாற்றம்

        வெளி மாவட்டங்களில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேருக்கு மதுரை மாவட்டத்துக்கு இடமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.
 

காரைக்குடி-அரசுப்பள்ளிக்கு திடீர் விடுமுறை

        காரைக்குடி அருகே கோவிலூரில் செவ்வாய்க்கிழமை துர்நாற்றம் வீசியதால் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து திடீர் விடுமுறையளிக்கப்பட்டது.
 

சம்பளத்தில் ரூ.20 லட்சம் பிடித்தம்போராட கருவூல துறையினர் தயார்

        ஊதியத்தில் ரூ.20 லட்சம் பிடித்தம் செய்வதை கண்டித்து, கருவூல கணக்குத்துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

Income Tax 2015-16 – Changes relevant to Salaried Employees

Income Tax 2015-16 – Changes relevant to Salaried Employees in Budget 2015

While Finance Minister termed Budget 2015-16 as a growth oriented one with due attention to common and poor in India, there were not much changes as far as Income Tax 2015-16 in respect of salaried employees are concerned. Personal Income Tax Rates were untouched and as a result Salaried Class will have to pay same Income Tax that they paid last year.

25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்த பள்ளிகளுக்கு 10 நாளில் நிலுவைத் தொகை: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் உறுதி

        தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக் கீட்டின் கீழ் ஏழை மாணவர்களைச் சேர்த்த தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 10 நாளில் கல்விக் கட்டணத் தொகை வழங்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உறுதி அளித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.


உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒரேயொரு பெண்ணுக்காக நடந்த உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு

         காவலர் பணி ஒதுக்கீட்டு பிரிவில் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு, உயர்நீதிமன்ற ஆணையின் பேரில், உதவி ஆய் வாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு டிஐஜி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் 1,078 காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடத்தப்பட்டது.


மனிதர்களுக்கு ஓரறிவே!

மனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு இருப்பதாக இதுவரை நமக்கு சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை கருதப்பட்டது போல மனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு கிடையாது, அவர்களுக்கு இருப்பது ஓரறிவே என டான் காட்ஸ் என்ற நரம்பியல் விஞ்ஞானி தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பிராண்டெய்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் அவர், சுவை அறிவுக்கும், நுகரும் அறிவுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

தீர்வு இதுவல்ல!

        மத்திய அரசில் குரூப்-டி, குரூப்-சி, குரூப்-பி பணியிடங்களுக்கான நியமனங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதலாக நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து (மன் கீ பாத்) வானொலி உரையில் தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே அவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்ததுதான். அதைத்தான் தற்போது மீண்டும் உறுதிப்படுத்தி எப்போது அமலுக்கு வரும் என்பதை அறிவித்திருக்கிறார்.


வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி

        பள்ளி, கல்லுாரிகளில் அரசு சார்பிலான சில உதவி தொகைகள், கல்விக் கடன் பெறவும் வருமானச் சான்றிதழ் அவசியம். அரசு வழங்கும் திருமண நிதியுதவி திட்டம், பெண் குழந்தைகள் நலத்திட்டம் போன்றவை பெறவும் இச்சான்றிதழ் தேவை. இதற்கான விண்ணப்பங்கள் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும்.
 

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி

        இ-சேவை மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்

       தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, தர்மபுரியில், போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது.

மருத்துவக் கல்லூரி குறித்து அறிவிப்பு வராததால் ஏமாற்றம்!

         கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து தகுதிகளும் இருந்தும், கேப்பர் மலையில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லுாரி துவங்காததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றுவாறு பல்வேறு வகையான நோய்களும் உருவெடுத்து வருகிறது.
 

1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

      பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 1,310 பேர் பணியிடமாறுதல் பெற்றனர்.

சட்டசபையில் 110வது விதியில் அறிவித்த 959 பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர் இல்லை?

       சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட, 959 புதியபாடப்பிரிவுகளுக்கு, அரசு கல்லுாரிகளில் பேராசிரியர்கள் இல்லை; இதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழக அரசு கட்டுப்பாட்டில், 83 அரசுகலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 1,000 பாடப்பிரிவுகள்; 8,000 பேராசிரியர்கள் உள்ளனர்.


வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு

      வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்: அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரை

     குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்ற சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

      திருப்புவனம், மானாமதுரை உள்பட 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

எஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்

           மத்திய அரசின் அனைவருக்கும்கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு முன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதலில் பயிற்சி தரப்பட்டது.ஆனால், இந்த பயிற்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:


நேரடி பணி நியமனத்தில் குளறுபடி

             அரசுத்துறைகளில் நேரடி பணி நியமனத்தில் குளறுபடிகள் நடப்பதாக வேலைவாய்ப்புத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளனர்.


இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணிடங்களை மறைப்பதாகக் கூறி ஆசிரியர்கள் தர்னா

         சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணியிடங்களை மறைப்பதாக கூறி திங்கள்கிழமை ஆசிரியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடமாறுதல் கலந்தாய்வு அக்., 26, 27 இல் நடைபெறுகிறது.


இ .பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

       ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை (life certificate) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர்வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டசெய்திக்குறிப்பு:


பி.எப். தொடர்பான குறைகளை தீர்க்க நவ.11-ம் தேதி சிறப்பு முகாம்

          தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்க வரும் நவம்பர் 11-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விகிதக் குறைபாடுகள்: தலைமைச் செயலரிடம் மனு

           மத்திய தலைமைச் செயலக உதவியாளர் நிலைக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனிடம் தலைமைச் செயலக சங்கநிர்வாகிகள், உதவிப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.இந்த மனுவில் கூறியிருப்பதாவது:


பத்தாம் வகுப்பு தேர்வு முறையை ஏன் மாற்ற வேண்டும்?

         அண்மையில் நடைபெற்ற காலாண்டுப் பொதுத்தேர்வில் 80%-க்கு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களை மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரே நேரில் சந்தித்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். 100% தேர்ச்சி என்பதுதான் அரசின் இலக்கு என்பதை வலியுறுத்தினார். அரசின் இந்த இலக்கை அடையவேண்டுமெனில் அலுவலர்கள் மேலிருந்து திட்டங்களைத் தீட்டுகிற போக்கை மாற்றிக்கொள்வது அவசியம்.

பள்ளிகளில் பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

         வட கிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 

அரசு மருத்துவமனைகளில் 547 மருத்துவர்கள் பணி: ஆன்லைனில்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

     தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 547 இடங்களுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் (MRB) மூலம் நிரப்பப்பட உள்ளன.

நாடு முழுவதும் டிச. 1, 2 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

          பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை இணைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்கள் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகஅறிவித்துள்ளன.இது தொடர்பாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


நேரடி நேர்முக தேர்வு அரசு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு

          தமிழக அரசு மருத்துவமனை களில் பணிபுரிய தற்காலிக அடிப்படையில் 547 அரசு உதவி டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக அரசு உதவி டாக்டர்களை தேர்வு செய்வதற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்புமருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் 5 இடங்களுக்கு ‘அறிவியல் எக்ஸ்பிரஸ்’வருகிறது

         அறிவியல் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது தொடர்பானவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இயக்கப்படும் “அறிவியல்எக்ஸ்பிரஸ்' ரயில் கடந்த 2007-ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு மனுவை பரிசீலிக்க உத்தரவு

               திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவைபரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவுதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கேட்டு வழங்கப்பட்ட மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வெங்கடேசன் உள்பட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

          திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் நடைபெறும் முக்கிய திருவிழாவான ஆழித்தேரோட்டம் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்றது.

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

       அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.-அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர். அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.இது தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:


Rajasthan Public Service Commission Recruitment for 13000+ posts of School Lecturer

        Rajasthan Public Service Commission published an advertisement for recruitment of Lecturer for which applications are invited from eligible and desirable candidates. Application form must be submitted Online in prescribed format. Candidatesmay apply Online from 23rd October 2015 and the last date of receipt of applications Online is 23rd November 2015


சிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு

         ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம்வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.


மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

        நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசியநரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.இந்த நேர்முகத் தேர்வுக்கு பரிந்துரை செய்யவேண்டி, ஏழை, எளிய மக்கள் பல இடைத்தரகர்களை நம்பி ஏமாந்து வருவதாகவும், தங்கள் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விதவைத் தாய்மார்களும் பணத்துக் காக சிரமப்பட வேண்டியுள்ளது.


பருவ மழை ஆபத்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கை-பள்ளிகளுக்குஇயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை

     பருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்

         அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூரில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு?

      வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அரசு அறிவிப்புவெளியிடவில்லையென்றால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பது என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.


தீபாவளி சிறப்பு பஸ்கள்: 28ம் தேதி அறிவிப்பு

           சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், 28ம் தேதி நடக்கவுள்ளது. அன்றைய தினம் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்புவெளியாகும்.


தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது?

       மாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது? 

ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர சிறப்பு பயிற்சி

       மாணவர்களுடன், ஆசிரியர்களுக்கும் ஒழுக்கத்தை கற்று கொடுக்க, வரும், 27ல், சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

புதிய பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்

   பெங்களூரு:புதியபள்ளி தொடங்குவதற்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறைவரவேற்றுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறைவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கப் பயிற்சி திருவண்ணாமலையில் இன்று தொடக்கம்

       திருவண்ணாமலை மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான இலவச சிறப்பு ஊக்கப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை (அக்டோபர் 26) தொடங்குகிறது.இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மூலம் திருவண்ணாமலை மாவட்ட அரசுப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் 150 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு ஊக்கப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்நிலைகளோடு, கலையையும் காப்பாற்றும் முயற்சி: ஆறு, குளங்களைக் காக்க பொம்மலாட்டப் பிரச்சாரம் - ஊர் ஊராகச் செல்லும் கோவை ஆசிரியர்



அழிந்து வரும் பாரம்பரியக் கலையான பொம்மலாட்டம் மூலம் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர் ஆனந்தராஜ்.கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓவியம் மற்றும் சாரணர் ஆசிரியர் ஆனந்தராஜ். இவர் கடந்த 20 ஆண்டு களாக ஊர் ஊராக சென்று, தமிழகத்தின் ஆறு, ஏரி, குளங்கள் மாசுபடுவது குறித்து பொம்மலாட்டக் கலை மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார்.


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு விருதுகள்: நவம்பர் 12-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

      மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அரசின் விருதுகளைப்பெற வரும் நவம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர், வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:


மீன்வளத் துறையில் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

   மீன்வளத் துறையில் புள்ளியியல் சேகரிப்பாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive