NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி குழந்தைகளுக்கு 'ஷூ': நடிகர் விஷால் அறிவிப்பு

        ஒரு, 'ஷூ' வாங்கினால், 1,000 'ஷூ'க்களை, குழந்தைகளுக்கு தானம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை, புதுப்பேட்டை, புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில், விஷால் நற்பணி மன்றம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. நடிகர் விஷால், இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் சார்பில் பூங்கோதை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

       விஷால் பேசியதாவது:எல்லா பள்ளி குழந்தைகளுக்கும், புத்தகம், சீருடையைப் போல், ஷூவும், சாக்சும் மிகவும் முக்கியம். மாணவர்கள் மீது பெற்றோர் மட்டுமல்ல, பொதுமக்களாகிய நாங்களும் நம்பிக்கை வைத்துள்ளோம். யாராவது உதவி என்று கேட்டால், நிச்சயமாக உதவ வேண்டும்; அதன் பலன், நிச்சயம் நன்மையை தரும்.

படத்தில் நடிக்கும்போது, 3,000 ரூபாயில், ஷூ வாங்குவது உண்டு. படப்பிடிப்பு முடிந்ததும், அது எங்கே போகிறது என்பது எனக்கு தெரியாது; ஒரு படத்துக்காக, லட்சக்கணக்கில் செலவு செய்வது உண்டு. இனி ஒவ்வொரு முறை, ஷூ வாங்கும் போதும், 1,000 ஷூக்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். இதை நான் மட்டுமல்ல; மற்றவர்களும் செய்யலாம்.இவ்வாறு விஷால் பேசினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive