NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்

         அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூரில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


           மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் காமராசு தலைமை வகித்தார்.மாநில செயலர் பிரேம்குமார், மாவட்டத் தலைவர் நாகமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தை பிளஸ்- 2 அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் 2 ஆம் இடத்தையும், எஸ்.எஸ்.எல்.சியில் மாநிலத்தில் 4 ஆம் இடத்தையும் பெறச்செய்ததோடு, மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக தேர்ச்சி விழுக்காட்டில் பெரம்பலூர் மாவட்டத்தைக் கொண்டுவர பல்வேறு ஆலோசனைகளை வழங்கும் ஆட்சியர் உள்ளிட்ட உயர்கல்வித்துறை அலுவலர்களை சங்கத்தின் சார்பில் பாராட்டுவது. போலி சங்கங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

ஆசிரியர்கள் சங்க கூட்டுப் போராட்டத்தில் பங்கேற்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அச்சுறுத்தல் ஏற்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்டத்தலைவர் வேலு, மாவட்ட அமைப்பாளர் கு. தேசிங்குராஜன், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில அமைப்பாளர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




9 Comments:

  1. First director JD CEO deo JD(p ) JD all wing evanga pasanangalai govt schoola searkka sollunga...naanga udanea searkkurom....OK vaa.....

    ReplyDelete
  2. இது மட்டமான சிந்தனை. ஏன் நாம் முதலில் சேர்த்தால் என்ன? கற்பிக்கும் பணியில் நேரடியாக ஈடுபடுவது நாம் தான். நாமே நம்மை நம்பாமல் ஏழை மக்கள் மட்டும் தம் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் நம் குழந்தைகள் மட்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ன நியாயம் சார் இது? நம் குழந்தைகள் வளமான பள்ளிகளில் படிக்க காரணம் அரசு பள்ளி மாணவர்கள் தான் காரணம்.மறக்க வேண்டாம் அன்பரே.

    ReplyDelete
    Replies
    1. Sir kuzhandhaigal eangu padikiraanga?

      Delete
  3. Arasu palligal unmai nilai arsu palli asiriyargaluku theariyum....private palligali 12 the paadathai 11th LA nadhi phy 200 che 200 bio 200 eaduthu MBBS seargiraan.... Asiriyargal arsu pallyil nadha muduyumaa? Nanbar kurai kooruvadhai vittu city unmai nilai ariya veandum... Ed dirctr JD deo ceo dro collector judges engrs pondravargal searthal makkaluku nambikai varum...
    ....

    ReplyDelete
  4. Appa samigala...... yaarum serka vendam.... namma pasanga arasu palliel serntha yepadi paadam nadathuvengalo athey pola paadam naduthunga,,,, athu podum... oru arasu palli asiriyaredum kuda porupu enbathu ellai... porupu erunthal ellam thana nadakum... nammala yevan keka poran,,, keeta enna.... ethavathu sollikalam nu erukathenga.... olunga vangura sambalathuku velai seilanelam athula paathiyavathu seiya try pannunga....arasu palli valga....

    ReplyDelete
  5. Summa JD , AD, CEO, DEO nu sollathenga..... total tamil nadula how entha JD AD CEO DEO lam ungalai pondra arasu palli asiriyarai veda ethanai madangu athigam? sollunga parkalam.... 100 perla 90 per teachers nenga.... apram summa avangala sonna enna artham... konjam koodam yosikamatengala?wat is mean by mejority?

    ReplyDelete
  6. Yaarum sandai poda veandam...avaravar viruuppam.....avrin thani manidha urimai..adhil thalai Yoda mudiyaadhu...

    ReplyDelete
  7. Yantha.pillaigala,ir.unthalum..govt.schoola..admission..pannunga..next...yearla,3percent.govt.school..only.padikiranga..97percent.privateschool.than..padikiranga.so.coming.this.planing...when

    ReplyDelete
  8. வெறும் 5000 சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர் செய்யும் வேலையில் பாதியை 50000 சம்பளம் வாங்கும் நாம் செய்தால் போதும் நம் அரசு பள்ளியின் நிலையை பறைசாற்ற. தனியார் பள்ளிகளில் வருடத்திற்கு வெறும் 12 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்த நாம் அரசு ஆசிரியராக மாறிய உடன் உலகிலுள்ள அனைத்து வகையான விடுப்புகளையும், சங்கம் என்ற பெயரில் பல நாட்கள் ஊர் சுற்றும் அனுமதிகளையும் எடுத்துக் கொண்டு அதையும் மீறி பள்ளி வந்தால் பாடம் நடத்தாமல் கோஷ்டி சண்டை போட்டுக் கொண்டும் இருந்தால் எப்படி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வார்கள்? ஒரு நாளைக்கு அரசு ஆசிாியருக்கு குறைந்த பட்சம் சுமார் 1500 ருபாய் ஊதியம் சனி ஞாயிறு உட்பட. உண்மையிலேயே கட்டுரையாளரும் விமர்சனம் எழுதிய அன்பர்களும் கூறுங்கள். ஒரு நாளைக்கு ருபாய் 1500 க்கு நாம் வேலை செய்கிறோமா? இது நமக்கு செரிக்குமா? உங்கள் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் இப்படி மெத்தனமாக நடந்துக் கொண்டால் நீங்கள் இப்படி இருப்பீர்களா? இதையெல்லாம் புரிந்துக் கொள்ளாமால் JD, CEO, DEO சேர்தார்களா நாங்கள் சேர்க்க என கூறுவது தவறானது. நம்மை நாமே நம்பாத போது JD, CEO, DEO மட்டும் நம்பி பிள்ளை எப்படி நம்மிடம் சேர்ப்பார்கள்?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive