NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைகள் விரும்பும் பள்ளிகளாக இன்றைய பள்ளிகள் இருக்கின்றனவா?

      யுனிசெப் நிறுவனம் சென்னையில் செயல்பட்டுவரும் சமூகக் கல்வி நிறுவனம் என்ற அமைப்புடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் குழந்தை நேயப் பள்ளிகளை உருவாக்கும் முனைப்புடன் சில செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. 

       இதன் ஒரு நிகழ்வாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருந்த ”Child friendly schools” என்ற ஆங்கில நூல் ”குழந்தை நேயப் பள்ளிகள் – கொள்கைகள் மற்றும் அமைப்பு முறைகள்” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அதன் புத்தக மதிப்புரை சென்னை சாந்தோம் மலையில் வைத்து அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழந்தை நேயப் பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்று பல்வேறு பரிமாணங்களில் விவாதிக்கப்பட்டது.

குழந்தைகள் விரும்பும் பள்ளிகளாக இன்றைய பள்ளிகள் இருக்கின்றனவா?. அத்தகைய பள்ளிகளை உருவாக்க தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர், சமூகம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடையாக குழந்தை நேய பள்ளிகளுக்கு மாதிரியாக விளங்கும் நெடுவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கருப்பையன் அவர்கள் குழந்தைகள் நேயப் பள்ளியை உருவாக்க தான் பயணித்து வந்த பாதையை அனைவரோடும் பகிர்ந்து கொண்டார்.

நாம் அனைவரும் நம் பள்ளிகளை குழந்தை நேய பள்ளிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு கூறாக எடுத்துப் பார்த்தால் நம் பள்ளி குழந்தைகள் விரும்பும் பள்ளியாக இருக்குமா என்பது சந்தேகம் தான். குழந்தைகள் விரும்பக்கூடிய சுற்றுச்சூழல், கற்றல் சூழல், படிக்கும் பாடம், கற்பிக்கும் முறைகள், கற்றதை சோதிக்கும் முறைகள் இவைகள் இருக்குமா என்றால் சந்தோகம் தான். வீட்டுக்குச் செல்லும் போது இருக்கும் மகிழ்ச்சி பள்ளிக்குள் வரும் போது காணாமல் போகிறது. குழந்தைகள் விரும்பும் சூழல் இருந்தால் தான் கற்றல் நிகழும்.

இத்தகைய பள்ளிகளை தமிழகம் முழுவதும் உருவாக்கும் நிகழ்வின் முதல் படியாக 150 பள்ளிகளை மாதிரி குழந்தை நேயப் பள்ளிகளாக உருவாக்கும் முயற்சியை யுனிசெப் நிறுவனத்தோடு இணைந்து மேற்கொண்டுள்ளோம். இதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பள்ளிகளை மாற்றுவதற்கு இலக்கு வைத்துள்ளோம். ஒரு check list தயார் செய்து அந்த check list ல் இருக்கும் செயல்பாடுகள் ஒரு பள்ளியில் இருந்தால் அது குழந்தை நேயப் பள்ளி என வரையறுக்கப்பட்டுள்ளது. 

நாங்களாக பள்ளிகளை தேர்ந்தெடுத்தால் அந்த பள்ளி check list ல் உள்ள அனைத்தும் தங்களிடம் இருப்பதாக கூறி தங்கள் பள்ளி குழந்தை நேயப் பள்ளி என்று அறிவித்து விடும். ஆனால் நிஜமாக அந்த பள்ளி குழந்தை நேயப் பள்ளியாக இருக்காது.

அதனால் தாங்களாகவே முன்வந்து தங்கள் பள்ளிகளை குழந்தை நேயப் பள்ளிகளாக மாற்றம் செய்ய விரும்பும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் check list ல் இல்லாத செயல்பாடுகளை தங்கள் பள்ளிகளில் கொண்டுவர முயற்சிப்பர். அப்படி முயற்சிக்க விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் விருப்பத்தை இங்கே தெரிவியுங்கள். உங்களுக்கு யுனிசெப் நிறுவனத்தோடு இணைந்து குழந்தை நேய பள்ளிகளை உருவாக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

கட்டாயப்படுத்தி எதையும் சாதிக்க இயலாது. விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ளுங்கள். சமத்துவக் கல்வி அமைப்பில் தொடர்புகொள்ள ஷியாம் சுந்தர் - 9750966400

நன்றி : TRS TIRUCHY




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive