Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.09.2026

 

உலக அமைதி நாள்




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:498

குறள்:

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். 

பொருள்:

சிறு படையினை உடையவனும், தன் வலிமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் சேர்ந்திருந்தால், பெரும்படை உடையவனும் தன் முயற்சியில் தோல்வி காண்பான்.

பழமொழி :

Practice makes man perfect.

சித்திரமும் கைப்பழக்கம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி : 

உயிரினங்களைப் பாதுகாப்போம்; இயற்கையைப் போற்றுவோம்.

Thought for the Day :

Pharmacists’ Day: “Care backed by knowledge can transform lives.”

பொது அறிவு : 

1. சமூக நீதி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? 

செப்டம்பர் 17. 

2.யாருடைய பிறந்த தினம் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது? 

தந்தை பெரியார்.

English words :

1.Versatile – Adaptable – பன்முகத்தன்மையுள்ள

2.Obsolete – Outdated – வழக்கொழிந்த

புவியியலும் சுற்றுசூழலும் :

கல்லணை காவிரி டெல்டா பகுதியில் வேளாண்மைக்கு மிக முக்கியமான நீர்வள ஆதாரமாக விளங்குகிறது. கல்லணையின் நீர்ப் பகிர்வு அமைப்பு மூலம் காவிரி நீர் பல கால்வாய்களுக்கு திருப்பி விடப்படுகிறது.

NMMS :

MAT 

சரியான கூற்றைத் தேர்ந்தெடு. 

(1) ஒரு குறிப்பிட்ட பாதையில் தோன்றும் இடத்திலிருந்து முகத்துவாரம் வரை ஓடுகின்ற நீர் ஆறு என அழைக்கப்படுகிறது. 

(2) ஆறு தன் போக்கில் ஒரு முதன்மை ஆற்றுடன் இணைவது கிளையாறு. 

(3) ஒரு முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து செல்வது கிளையாறு. 

(4) ஆறு கடலை அடையும்போது ஆற்று நீரின் வேகம் அதிகரிக்கிறது. 

விடை: (1) ஒரு குறிப்பிட்ட பாதையில், தோன்றும் இடத்திலிருந்து முகத்துவாரம் வரை ஓடுகின்ற நீர் ஆறு என அழைக்கப்படுகிறது.

செப்டம்பர் 21

உலக அமைதி நாள்

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் முன்னர் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.ஆனாலும் 2002-இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

 கடலைக் காப்போம் – உயிர்களைக் காப்போம்

ஒரு பெரிய நீலக் கடலில் பலவிதமான கடல்வாழ் உயிரினங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. அங்கே மீன்கள், ஆமைகள், டால்பின்கள், நண்டுகள், கடல் குதிரைகள் என ஏராளமான உயிரினங்கள் ஒன்றாக வாழ்ந்தன.

ஒருநாள் காலை, கடற்கரையிலிருந்து அடித்துக் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் போன்ற குப்பைகள் கடல் நீரில் மிதந்து கொண்டிருந்தன.

அதைப் பார்த்த சிறிய மீன் ஒன்று கவலையுடன்,

“நம் கடல் எவ்வளவு அழகாக இருந்தது! இப்போது ஏன் இப்படி குப்பையாகிவிட்டது?” என்று கேட்டது.

அதற்கு ஆமை,

“மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை கடலில் வீசுவதால் நம் வீடு மாசடைந்து வருகிறது. இந்தக் குப்பைகள் நமக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன,” என்றது.

அப்போது டால்பின்,

“கடல் நீர் தூய்மையாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். கடல் மாசடைந்தால் மீன்களுக்கும், ஆமைகளுக்கும் மட்டுமல்ல, கடலைச் சார்ந்து வாழும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்,” என்றது.

நண்டு உடனே,

“அப்படியானால் நாம் என்ன செய்யலாம்?” என்று கேட்டது.

“நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, மனிதர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும்,” என்றது கடல் குதிரை.

அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் கடற்கரைக்கு அருகில் ஒன்று கூடி,

“கடலில் குப்பைகளை வீசாதீர்கள்! பிளாஸ்டிக் பொருட்களைத் தவிருங்கள்! கடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்!” என்று தங்கள் மொழியில் முழக்கமிட்டவாறு மனிதர்களின் கண்ணில் படுமாறு கடலில் துள்ளிக் குதித்தன.

அன்று கடற்கரைக்கு வந்தகளும்  குழந்தைகளும் திடீரென கடலில் கூட்டமாக மீன்கள் இவ்வாறு துள்ளுவதற்கான காரணத்தை யோசித்தனர். ஏதோ அசாதாரணமாக நடக்கப்போகிறது என பயப்பட்டனர்.  கடலில் குப்பைகள் மிதப்பதைக் கண்டு வருந்தினர். குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமும் நண்பர்களிடமும் இதைப் பற்றி எடுத்துக் கூறினர். பின்னர் அனைவரும் சேர்ந்து கடற்கரையைச் சுத்தம் செய்தனர்.

கடல் மீண்டும் தூய்மையாக மாறத் தொடங்கியது. மீன்களும் ஆமைகளும் டால்பின்களும் மகிழ்ச்சியுடன் நீந்தின.

அப்போது கடல் குதிரை மகிழ்ச்சியுடன்,

“நம் கடல் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. எண்ணற்ற உயிர்களின் வீடு. அதைத் தூய்மையாகப் பாதுகாப்பது நம் அனைவருடைய கடமை!” என்றது.

🌱 நீதி:

கடல் நீரைத் தூய்மையாக வைத்தால் கடல்வாழ் உயிரினங்களையும், இயற்கையையும், மனிதர்களையும் பாதுகாக்க முடியும். எனவே கடலில் குப்பைகளை வீசாமல், கடலைத் தூய்மையாகப் பாதுகாப்போம்.

இன்றைய செய்திகள்

21.09.2026

🗒️துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
🗒️வான்வழி பயிற்சியின் ஒரு பகுதியாக, ஜப்பான் போர் விமானங்கள் இந்திய மண்ணில் இருந்து முதல் முறையாக இயக்கப்பட இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி ஏபி சிங் தெரிவித்துள்ளார்.

🗒️ சுவீடன் நாட்டு எம்.பி.யாக இந்திய வம்சாவளி பெண் நிலா விகே பாட்டீல்  வெற்றிப் பெற்றுள்ளார்.
 
விளையாட்டுச் செய்திகள்

🏀 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 பதக்கங்களை வென்று தந்துள்ளார் கடலூர் வீராங்கனை இளவேனில் வாலறிவன்.

🏀ஆசிய விளையாட்டுப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதியில் 114 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

Today's Headlines

🗒️ Vice President C. P. Radhakrishnan is visiting Coimbatore today. So, flying drones has been banned in and around the city for security reasons.

🗒️ As part of an air exercise, Japanese fighter jets are going to operate from Indian soil for the first time. Indian Air Force Chief A. P. Singh has said this.

🗒️ Nila Vike Patil, a woman of Indian origin, won an MP seat in Sweden.

🏀 Sports News

🏀 Cuddalore athlete Ilavenil Valarivan won 2 medals for India in a single day at the Asian Games.

🏀 India defeated Bangladesh by 114 runs in the Asian Games semi-final and entered the final. Smriti Mandhana, who played very well in the match, reached a new milestone in international T20 cricket.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive