தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தில் 4,724 ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பொது செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர் பட்டயப் படிப்பு அல்லது செவிலியர் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 50 ஆண்டுகள்.
மாதம் ரூ.21,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை முறையில் தேர்வு நடைபெறும்.
எழுத்துத் தேர்வு கிடையாது; ஆவணச் சரிபார்ப்புக்குப் பிறகு நியமனம் நடைபெறும்.
விண்ணப்பப் படிவத்தை nhm.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்கலாம்.
செப்டம்பர் 25, 2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...