இயல் : அரசியல்
அதிகாரம்:50.இடன் அறிதல்
குறள் எண்:499
குறள்:
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
பொருள்:
மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.
Prevention is better than cure.
வருமுன் காப்பதே சிறந்ததே.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.
2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.பொன்மொழி :
மொழி வேறானாலும், அன்பும் புரிதலும் ஒன்றே.”
Thought for the Day :
Tourism Day: “Explore the world, respect its cultures.”
பொது அறிவு :
1. நாம் கல்வி வளர்ச்சி தினத்தை எந்த ஆண்டு முதல் கொண்டாடி வருகிறோம்?
2006 ஆண்டு முதல் கொண்டாடுகிறோம்.
2. தமிழக அரசு சார்பில் திருக்குறள் வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?
டிசம்பர் கடைசி வாரம்.
English words :
1. Coherent– Logical – ஒத்திசைவான
2.Tedious– Boring – சலிப்பூட்டும்
புவியியலும் சுற்றுசூழலும் :
கல்லணை சோழர்களின் நீர்மேலாண்மை மற்றும் பொறியியல் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
இன்றும் கல்லணை பயன்பாட்டில் இருப்பது அதன் வரலாற்றுச் சிறப்பையும் பொறியியல் நுட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.
NMMS :
MAT
ஒரு கடிகாரத்தில் 3 மணி அடிக்க 3 வினாடிகள் ஆகின்றன. அதே கடிகாரத்தில் 6 மணி அடிக்க எத்தனை வினாடிகள் ஆகும்?
A) 5 வினாடிகள்
B) 6 வினாடிகள்
C) 7.5 வினாடிகள்
D) 9 வினாடிகள்
💡 கவனமாக யோசியுங்கள்: மணி அடிக்கும் எண்ணிக்கையை விட, அவற்றுக்கு இடையிலான இடைவெளிகளைக் கணக்கிட வேண்டும்.
கடிகாரம் 3 முறை அடிக்கும்போது, இடைவெளிகள் 2 மட்டுமே:
3 வினாடிகள் ÷ 2 = 1.5 வினாடி ஒரு இடைவெளி.
6 முறை அடிக்கும்போது இடைவெளிகள் 5.
5 × 1.5 = 7.5 வினாடிகள் ✅
சரியான பதில்: C) 7.5
செப்டம்பர் 22
நீதிக்கதை
பொறுமையின் கனி 🦋
ஒரு காட்டில் வாழ்ந்து வந்த கம்பளிப்பூச்சி ஒன்று ஒரு நாள் வானில் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்தது
கம்பளிப்பூச்சி:
“ஐயோ! நான் எப்போது அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறுவேன்?
வண்ணத்துப்பூச்சி:
“வணக்கம் கம்பளிப்பூச்சியே! எப்படி இருக்கிறாய்?”
கம்பளிப்பூச்சி:
“ உனக்கு அழகான சிறகுகள் இருக்கின்றன. நீ வானத்தில் பறக்கிறாய். நானும் உடனே உன்னைப் போல மாற வேண்டும்!”
வண்ணத்துப்பூச்சி:
“நண்பியே, ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு. பொறுமையாக இரு.”
கம்பளிப்பூச்சி:
“எனக்கு எந்தக் காலமும் வேண்டாம்! இப்போதே மாற வேண்டும்!”
இப்படி சொல்லிய கம்பளிப்பூச்சி இலைகளை தனக்கு இறக்கைகளாக கட்டி பறக்க முயன்றது. அந்தோ பரிதாபம் சகதியில் போய் விழுந்தது. அதை ஒரு முயல் பார்த்தது
முயல்:
“ஹா! ஹா! கம்பளிப்பூச்சியே, நீ பறக்கப் போகிறாயா? முதலில் ஒழுங்காக நடக்கக் கற்றுக்கொள்!”
கம்பளிப்பூச்சி:
“என்னை கேலி செய்யாதே! நான் நிச்சயமாக வண்ணத்துப்பூச்சி போல் பறப்பேன் !”
முயல்:
“அதற்கு நீண்ட காலம் ஆகும். உனக்குப் பொறுமை கிடையாதே!”
கம்பளிப்பூச்சி:
“எனக்கு பொறுமையாக இருக்க பிடிக்கவில்லை. !”
இப்படி சொல்லி விட்டு கம்பளிப் பூச்சி கவலையோடு அமர்ந்து இருந்தது. அங்கு ஒரு வெட்டுக்கிளி வந்தது
வெட்டுக்கிளி:
“கம்பளிப்பூச்சியே, ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய்?”
கம்பளிப்பூச்சி:
“நான் உடனே வண்ணத்துப்பூச்சியாக மாற வேண்டும். ஆனால் முடியவில்லை!”
வெட்டுக்கிளி:
“நண்பியே, கடவுள் படைத்த ஒவ்வொரு உயிருக்கும் ஒரு வளர்ச்சிப் பாதை உண்டு. பொறுமையாகக் காத்திரு.”
கம்பளிப்பூச்சி:
“எனக்குக் காத்திருக்கப் பிடிக்கவில்லை.
வெட்டுக்கிளி:
“சில காரியங்களில் பொறுமையுடன் இருந்தால் மட்டுமே பலன் உண்டு.”
கம்பளிப்பூச்சி:
“ஓ அப்படியா இனிமேல் பொறுமையுடன் இருக்க முயற்சி செய்கிறேன்.”
கம்பளிப்பூச்சி பொறுமையுடன் தனது இயல்பான வளர்ச்சிப் பாதையில் சென்றது. சில நாட்களுக்குப் பிறகு அது ஒரு கூட்டை உருவாக்கிக் கொண்டது. பின்னர், கூட்டிலிருந்து ஓர் அழகான வண்ணத்துப்பூச்சி வெளியே வந்தது.
வண்ணத்துப்பூச்சி:
“ஆஹா! என்னால் பறக்க முடிகிறது! கடவுளுக்கு நன்றி!”
முயல்:
“அடடா! நீ உண்மையிலேயே அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறிவிட்டாய்!”
வெட்டுக்கிளி:
“பார்த்தாயா? பொறுமையின் பலன் எவ்வளவு அழகானது!”
வண்ணத்துப்பூச்சி:
“ஆம்! நான் ஓர் உண்மையை கற்றுக்கொண்டேன். எல்லாம் உடனே நடக்க வேண்டும் என்று அவசரப்படக் கூடாது. கடவுள் தமது நேரத்தில் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்கிறார்.”
வெட்டுக்கிளி:
“அருமை! பொறுமையுடன் நன்மை செய்வோம். ஏற்ற காலத்தில் பலன் பெறுவோம்!”
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...