Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காலாண்டு விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகள்: தனியார் பள்ளிகள் மீது பெற்றோர் புகார்

hindutamil-prod%2F2026-09-28%2Fyzp495u8%2FBeFunky-collage-54

காலாண்டு விடுமுறையில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் இணையவழியில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முதல் பருவம் மற்றும் காலாண்டுத் தேர்வு கடந்த செப்டம்பர் 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 26-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 5-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மீறினால் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் செயல்படும் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு நேரடியாகவும், இணையவழியிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக சென்னை தாம்பரம், மேடவாக்கம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழியில் பாடங்களை நடத்திவருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அதற்கான தினசரி பாடவேளைகள் குறித்த பள்ளிகளின் அட்டவணையும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பேசுப்பொருளாகியுள்ளது. தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், ‘‘பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பல்வேறு தனியார் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகள் நடத்தி வருகின்றன. சில மணி நேர வகுப்புகள் என்றால்கூட பரவாயில்லை.

வழக்கமான வகுப்புகளை போல் தினமும் காலை 10 முதல் மாலை 4 மணி வரை பாடங்கள் நடத்துகின்றன. தொடர்ச்சியாக நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive