Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவி சித்ரா தேவியின் மருத்துவப் படிப்புக்கு ஆசிரியர் சங்கம் நிதியுதவி

 


கோவில்பட்டி அருகே உருளை குடியை அடுத்த ரவுத்தர்பட்டியைச் சேர்ந்தவர் யாக்கோபு. கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி முருகலட்சுமி.

இவர்களது மகள்கள் சித்ரா தேவி, நிர்மலா தேவி. இதில், மூத்த மகள் சித்ரா தேவி உருளை குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தார்.ஆசிரியர் கையேடு

பின்னர் திருநெல்வேலியில் உள்ள சாராள் தக்கர் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2023-ம் ஆண்டு 12-ம் வகுப்பில் 466 மதிப்பெண்

களுடன் தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பு படிக்க எண்ணிய சித்ராதேவி, தொடர் முயற்சியில் இந்தாண்டு நீட் தேர்வில் 462 மதிப்பெண் எடுத்தார்.

கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. சித்ராதேவிக்கு முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்கு ரூ.8.45 லட்சம் செலுத்த வேண்டும்.

இதில், அவரது தந்தையின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு கீழே உள்ளதால், படிப்புக்கான கட்டணம் ரூ.4.50 லட்சத்தை செலுத்த தேவையில்லை. மீதமுள்ள ரூ.3.95 லட்சம் செலுத்த வேண்டும்.

ஆனால், அந்த பணத்தை செலுத்த முடியாத ஏழ்மை நிலையில் இருந்து வந்தார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.ஆன்லைன் பாடங்கள் கற்பீர்

இதன் எதிரொலியாக மாணவி சித்ரா தேவியின் மருத்துவப் படிப்புக்கு உதவும் வகையில் ஏராளமானோர் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

இதில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவில்பட்டி வட்டாரக் கிளை சார்பில் ஆசிரியர்களிடம் ரூ.1 லட்சம் நிதி திரட்டப்பட்டது.

இதனை நேற்று வீட்டுக்கு நேரில் சென்ற ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகிகள், மாணவி சித்ராதேவியிடம் நிதியை ஒப்படைத்தனர். அவர் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive