Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.09.2026

தந்தை பெரியார்




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:495

குறள்:

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற


பொருள்:

ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

பழமொழி :

Penury pinches all

பசிவந்தால் பத்தும் பறந்து போகும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி : 

தொடர்ந்து கற்றுக்கொள்,

ஆய்வு செய்

உருமாறு.!

   - தந்தை பெரியார்

Thought for the Day :

Peace Day: “Choose dialogue over conflict and kindness over hatred.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள் எத்தனை?

 39 .

 2. தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் எத்தனை? 

 234

English words :

1. *Resilient** – Tough – தாங்கக்கூடிய

2. **Eloquent** – Articulate – சொற்சிறப்புமிக்க

புவியியலும் சுற்றுசூழலும் :

பேரூராட்சி -
கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறமாக வளர்ந்து வரும் பகுதிகளை நிர்வகிக்கும் உள்ளாட்சி அமைப்பு பேரூராட்சி எனப்படுகிறது.இது கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்ட வளர்ச்சிப் பகுதிகளின் நிர்வாகத்தை மேற்கொள்கிறது.

NMMS :

MAT 

ஒரு கடிகாரத்தில் 8.36.02 பி.ப. இருந்து 8.36.50 பி.ப. வரை கடக்கும்பொழுது நொடி முள் எத்தனை கோணம் சுழன்று இருக்கும்? 

 (1) 294.

 (2) 288.

 (3) 282. 

 (4) 298. 

 விடை: (2) 288

செப்டம்பர் 17

பெரியார் பிறந்த தினம் - சமுக நீதி நாள்


பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.  சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை.

நீதிக்கதை

சிறிய விதையின் பெரிய கனவு

ஒரு சிறிய கிராமத்தில் அருள் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு மரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது, சாலையோரத்தில் ஒரு சிறிய விதையை கண்டான். அதை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்புறம் மண்ணில் நட்டான்.

தினமும் காலையில் எழுந்தவுடன் அந்த விதைக்கு கொஞ்சம் தண்ணீர் ஊற்றுவான்.

“நீ பெரிய மரமாக வளர வேண்டும். உன்னிடம் நிறைய பறவைகள் வந்து தங்க வேண்டும்!” என்று ஆசையாகச் சொல்வான்.

சில நாட்கள் கடந்தன. 🌱

மண்ணிலிருந்து ஒரு சிறிய தளிர் வெளியே வந்தது.

அருள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

ஆனால் ஒரு நாள் பலத்த காற்று வீசியது. அந்தச் சிறிய தளிர் வளைந்து கீழே விழுந்தது.

அருள் கவலைப்பட்டான். “இனி இது வளராது போலிருக்கிறதே!” என்று நினைத்தான்.

அவனுடைய தாத்தா அருகில் வந்து,

“அருளே, விழுந்துவிடுவது தோல்வி அல்ல; மீண்டும் எழாமல் இருப்பதுதான் தோல்வி” என்றார்.

அருள் தளிருக்கு ஒரு சிறிய குச்சியை ஆதரவாக வைத்து, அதைச் சுற்றி வேலி அமைத்தான். தொடர்ந்து தண்ணீர் ஊற்றினான்.

மாதங்கள் சென்றன...

அந்தச் சிறிய தளிர் பெரிய மரமாக வளர்ந்தது. 🌳

ஒருநாள் அதன் கிளைகளில் பறவைகள் கூடு கட்டின. அதன் நிழலில் கிராமத்து குழந்தைகள் விளையாடத் தொடங்கினர்.

அருள் மரத்தைப் பார்த்து சிரித்தான்.

அப்போது தாத்தா சொன்னார்:

“ஒரு சிறிய முயற்சி, தொடர்ந்து செய்யப்படும்போது, ஒருநாள் பெரிய மாற்றமாக மாறும்.”

அருள் அந்த நாளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு மரக்கன்றை நட்டான்.

🌟 நீதிக்கதை:

சிறியதாகத் தொடங்கினாலும், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் பெரிய சாதனையை உருவாக்கலாம்.

இன்றைய செய்திகள்

17.09.2026

🗒️தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 19 ம் தேதி கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🗒️இமயமலையில் 18,300 அடி உயர 'பராங் லா' கணவாயை கடந்த நம் இந்திய தேசிய மாணவர் படை மாணவிகள்.

🗒️இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் 
93-29 என்ற வாக்குகள் கணக்கில் மசோதா நிறைவேற்றம்.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய போட்டிக்கு இந்திய அணி தயாராக ரூ.702 கோடி செலவு  என விளையாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

🏀அதிவேகமான சேசிங்... ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை படைத்த இந்தியா.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி  2-0 என கைப்பற்றியது.

Today's Headlines


🗒️ A special camp for fingerprint registration will be held on the 19th at all ration shops in Tamil Nadu.

🗒️ Indian National Cadet Corps (NCC) girl students crossed the 18,300-feet-high Parang La Pass in the Himalayas.

🗒️ The India–New Zealand Free Trade Agreement Bill was passed in the New Zealand Parliament with 93 votes in favour and 29 against.

🏀 Sports News

🏀 The Sports Ministry has said that ₹702 crore will be spent to prepare the Indian team for the Asian Games.

🏀 Fastest chase: India created a new record against Afghanistan.
India won the T20 series against Afghanistan 2–0.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive