
எஸ்சி, எஸ்டி, எஸ்சி-மதம் மாறிய கிறிஸ்தவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் தொடர்பாக, இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வியறிவு விகிதத்தையும் கல்வித்தரத்தையும் உயர்த்தும் நோக்கில் அவர்களுக்கு மத்திய-மாநில அரசு சார்பில் பல்வேறு கல்வி உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் 2019-20 காலகட்டத்தில் குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான ப்ரீ-மெட்ரிக், போஸ்ட்-மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்கள் சராசரியாக 46 சதவீதம் மற்றும் 39 சதவீத பள்ளிகளைச் சென்றடையவில்லை.
கடந்த 2017-23 காலகட்டத்தில் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் 36,510 எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.7.28 கோடி கல்வி உதவித்தொகை ஒரு மாதம் முதல் ஓராண்டு வரை காலதாமதமாக வழங்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் வங்கிக்கணக்கு முடக்கம், பரிவர்த்தனை நிறுத்தம், வங்கிக்கணக்கு இல்லை போன்ற காரணங்களால் 3,530 பேருக்கு ரூ.161 கோடி கல்வி உதவித்தொகை வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல், 2023-25-ம் ஆண்டுகளில் மத்திய கல்வி உதவித்தொகை பெற தகுதியில்லாத எஸ்சி மதம் மாறிய கிறிஸ்தவ மாணவர்கள் 2,576 பேருக்கு மத்திய அரசின்பங்கான 60 சதவீத உதவித்தொகை வழங்கப்பட்டதால் ரூ.3.64 கோடி தவறாக செலுத்த நேரிட்டது.
தணிக்கை குழு பரிந்துரைகள்
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அனுமதிக்கும் முன், கல்வி நிறுவனங்களில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.
தகுதியுள்ள மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அவர்களின் விண்ணப்பங்களை அரசு ஆராய வேண்டும். கல்வி உதவித்தொகை அந்தந்த கல்வி ஆண்டிலேயே வழங்கப்பட வேண்டும்.
பலவீனமான நிதி கட்டமைப்பு
2024-2025-ம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முந்தைய ஆண்டில் பதிவான 13.34 சதவீதத்திலிருந்து 15.98 சதவீதமாக உயர்ந்தது. மாநில பொருளாதாரம் வலுவான வளர்ச்சியை பதிவு செய்தது.
தனிநபர் வருமானத்தில் மாநிலம் தொடர்ந்து தேசிய சராசரியைவிட சிறப்பாக இருந்தது. இது மாநிலம் ஒரு வலுவான பொருளாதாரத்தை கொண்டிருப்பதை குறிக்கிறது.
இந்த சாதகமான பொருளாதார சூழல் இருந்தபோதிலும் மாநிலத்தின் நிதிநிலைமை அழுத்தத்தில் இருந்தது. 2022-23 முதல் 2024-25 வரையிலான 3 ஆண்டுகளில் வரி அல்லாத வருவாய் 29.72 சதவீதம் அதிகரித்தது.
மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மானியம் 34.86 சதவீதம் குறைந்தபோதிலும் மத்திய வரிகளில் மாநிலங்களின் பங்கு அதிகரிப்பு, சொந்த வரி வருவாயில் ஏற்பட்ட 7.74 சதவீத வளர்ச்சி ஆகியவற்றால் வருவாய் வரவுகளில் ஏற்பட்ட தாக்கம் ஓரளவு தணிக்கப்பட்டது.
மாநிலத்தின் நிதி நிலை, வலுவான பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்ச்சியான நிதி நெருக்கடியும் நிலவும் ஒரு முரண்பாட்டை பிரதிபலித்தது. பற்றாக்குறை அளவுகளும், கடன் விகிதங்களும் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருந்தாலும் அடிப்படை நிதிக்கட்டமைப்பு பலவீனமாக இருந்தது.
வரிப்பணம் வீணடிப்பு
தமிழகத்தில் 12 நகரங்களை ‘சீர்மிகு நகரங்களாக’ (ஸ்மார்ட் சிட்டி) மேம்படுத்த திட்டமிட்ட நிலையில், முன்மொழிவு குளறுபடியால் திண்டுக்கல் நிராகரிக்கப்பட்டு 11 நகரங்கள் மட்டுமே தேர்வாகின







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...