Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2026

 






திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:492

குறள்:

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். 

பொருள்:

வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.

பழமொழி :

Once bitten, twice shy.

சூடுபட்ட பூனை அடுப்பண்டை சேராது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“இளைஞர்களின் உழைப்பும் திறமையும் இணைந்தால், நாட்டின் வளர்ச்சி வேகம் பெறும்.”

Thought for the Day :

Engineers’ Day: “Innovate today to build a better tomorrow.”

பொது அறிவு : 

1. தென்னாட்டின் ஜான்சி ராணி என்றழைக்கப்படுபவர் யார்? 

அஞ்சலை அம்மாள். 

2. தென்னாட்டின் பகத்சிங் என்றழைக்கப்படுபவர் யார் ? 

வாஞ்சிநாதன்

English words :

1. Lucid – Easy to understand, எளிதில் புரியக்கூடிய.


2. Proficient – Highly skilled, திறமைமிக்கவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

இதற்காக கிராம மக்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். மக்கள் பெரிய தொழிற்சாலைகளை மட்டும் சாராமல், சிறு மற்றும் குடிசைத் தொழில்களை வளர்க்க வேண்டும் என்றார்.கதர் மற்றும் கைத்தறி
கதர் நூற்பு, நெசவு போன்ற கிராமக் கைத்தொழில்களை ஊக்குவித்தார். இதன் மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கருதினார்.

NMMS :

SAT 

இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் _____

(1) சென்னை

(2) டெல்லி 

(3) மும்பை

(4) கொல்கத்தா

விடை:  (2) டெல்லி

செப்டம்பர் 11

மகாகவி பாரதியின் நினைவுநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.

நீதிக்கதை

 நேரம் தவறாமை

ஒரு அழகான காட்டில் அணில், முயல், குரங்கு ஆகிய மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஆந்தை ஆசிரியராக இருந்தார்.

ஒருநாள், மறுநாள் காலை காட்டில் ஒரு முக்கியமான அறிவுப் போட்டி நடைபெறும் என்று ஆந்தை ஆசிரியர் அறிவித்தார். போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கும் என்றும், அனைவரும் 7:45 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும் கூறினார்.

அணில் அன்று இரவே தனது புத்தகங்களையும் தேவையான பொருட்களையும் தயார் செய்து வைத்தது. காலையில் சீக்கிரமாக எழுந்து, நேரத்திற்கு முன்பே போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்றது.

முயலும் சரியான நேரத்தில் வந்தது. ஆனால் குரங்கு, “இன்னும் நிறைய நேரம் இருக்கிறது” என்று நினைத்து விளையாடிக் கொண்டிருந்தது. நேரம் சென்றதே தெரியாமல் போனது.

குரங்கு அவசரமாக ஓடி வந்தபோது போட்டி தொடங்கிவிட்டது. அதனால் முதல் சுற்றில் கலந்துகொள்ள முடியவில்லை.

போட்டி முடிந்ததும், ஆந்தை ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்:

“நேரத்தை மதிப்பவன் தனது வாழ்க்கையையும் மதிக்கிறான். கடந்துபோன நேரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாது. எனவே, ஒவ்வொரு செயலையும் சரியான நேரத்தில் செய்வது மிகவும் முக்கியம்.”

அப்போது குரங்கு தனது தவறை உணர்ந்தது. இனிமேல் எந்த வேலையையும் தாமதப்படுத்தாமல், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது.

🌟 நீதி:

“நேரம் பொன்னைவிட மதிப்புமிக்கது; நேரத்தை மதிப்பவன் வாழ்க்கையில் முன்னேறுவான்.”

 மாணவர்களுக்கான நினைவுச் சொல்:

“இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு தள்ளாதே; நேரம் தவறாமல் செய்!”

இன்றைய செய்திகள்

11.09.2026

🗒️சென்னை மாநகராட்சியில் பள்ளிக்குச் செல்லாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் மூலம்
263 குழந்தைகள் தொழிற்பயிற்சி நிலையத்திலும், பள்ளியிலும்  சேர்க்கப்பட்டுளனர்.

🗒️தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இங்கிலாந்து பயணம்  எனத் தமிழக அரசு விளக்கம்.

🗒️வளைகுடா போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தாண்டிவிட்டது. ஆகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகள் உயரும் அபாயம் உள்ளது.

🗒️பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்க உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகைத்தர உள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஸ்குவாஷ் வீரர் - வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில்  சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று பாராட்டு நடந்தது. விழாவில் நிதியுதவி , சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.

Today's Headlines

🗒️ In the Chennai Corporation, a special camp was held for children with disabilities who were not attending school. Through this camp, 263 children were admitted to vocational training centres and schools.

🗒️ The Tamil Nadu Government said that Chief Minister Joseph Vijay is travelling to the United Kingdom to attract more industrial investments.

🗒️ Due to the impact of the Gulf War, the price of crude oil has again crossed 100 dollars per barrel. So, petrol and diesel prices may increase in India.

🗒️ The BRICS Summit is going to be held in Delhi. World leaders are expected to visit India to participate in the summit.

🏀 Sports News

🏀 A felicitation ceremony was held yesterday at Nehru Stadium, Chennai, for Tamil Nadu squash players. At the event, Minister Aadhav Arjuna presented financial assistance and certificates to the players.

Covai women ICT_போதிமரம்

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive