Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்தூர் பல்கலை.யில் சேரும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 100% கல்விக் கட்டண சலுகை

hindutamil-prod%2F2026-09-09%2Fvjy8v0dx%2FG-7 
மத்​தி​யப் பிரதேசத்​தின் இந்​தூரில் உள்ள தேவி அகல்யா பல்கலைக்கழகம், முன்​னாள் அக்​னிவீரர்​கள் உயர்​கல்​வியைத் தொடர​வும், வேலை​வாய்ப்​பு​களைப் பெற​வும் உதவும் வகை​யில், அவர்​களுக்​கான கல்விக் கட்​ட​ணத்​தில் 100 சதவீதம் சலுகை வழங்கப்​படும் என அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​தர் டாக்​டர் ராகேஷ் சிங்​காய் கூறிய​தாவது: அக்​னிபத் திட்​டத்​தின் கீழ், நாட்டின் தற்​போதைய பாது​காப்​புத் தேவை​களை கருத்​தில் கொண்டு குறுகிய கால அடிப்​படை​யில், ஆயுதப் படைகளில் அக்னி வீரர்​கள் சேர்க்​கப்​படு​கின்​றனர். நாட்​டைப் பாது​காக்​கும் அக்​னி வீரர்​கள், தங்​களது வாழ்க்​கை​யின் பொன்​னான நான்கு ஆண்​டு​களை ராணுவத்​தில் செல​விடு​கின்​றனர். இதனால் அவர்களால் பல நேரங்​களில் படிப்​பைத் தொடர முடிவ​தில்​லை.

ராணுவத்​தில் பணி​யாற்​றிய பிறகு அவர்​கள் உயர்​கல்​வியை நிறைவு செய்​து, நல்ல வேலை​வாய்ப்​பைப் பெற்​று, புதிய வாழ்க்கை​யைத் தொடங்க வேண்​டும் என்​ப​தைக் கருத்​தில் கொண்​டு, எங்​கள் பல்​கலைக்​கழகத்​தில் அவர்​களுக்கு கல்விக் கட்​ட​ணத்​தில் 100 சதவீதம் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்​தி​யப் பிரதேச அரசால் 1964-ம் ஆண்டு நிறு​வப்​பட்ட இந்த பல்கலைக்​கழகம் வழங்​கும் சுமார் 200 படிப்​பு​களில் ஏதேனும் ஒன்றில் முன்​னாள் அக்​னி வீரர்​கள் சேர்க்கை பெறு​வ​தில் வெற்றி பெற்​றால், அவர்​களுக்கு 100 சதவீத கல்விக் கட்​ட​ணச் சலுகை வழங்​கப்​படும்.

அக்​னிவீரர்​கள் நான்கு ஆண்​டு​கள் பணியை நிறைவு செய்​திருக்க வேண்​டும். பணிக்​காலத்​தில் பணி நீக்​கம் செய்​யப்​பட்​ட​வர்​கள் அல்​லது ஒழுங்கு நடவடிக்​கைக்கு உள்​ளானவர்​கள் இந்​தக் கல்விக் கட்​ட​ணச் சலுகை​யைப் பெற தகு​தி​யற்​றவர்​கள் ஆவர். இந்​தக் கட்​ட​ணச் சலுகைக்கு எந்த உச்​சவரம்​பும் நிர்ணயிக்கப்படவில்​லை. தகு​தி​யுள்ள அனைத்து முன்​னாள் அக்னி வீரர்​களும் இந்தச் சலுகை​யைப் பெறு​வார்​கள்.

எதிர்​காலத்​தில், முன்​னாள் அக்​னி வீரர்​களுக்கு மாணவர் சேர்க்​கை​யில் இடஒதுக்​கீடு வழங்​கு​வது குறித்​தும் பல்​கலைக்​கழகம் பரிசீலிக்​கலாம். மேலும், அவர்​களுக்​காக சிறப்பு படிப்​பு​களை​யும் உரு​வாக்​கலாம்.

முப்​படைகளி​லும் பணி​யாற்​றும் வீரர்​களின் குழந்​தைகளுக்கு ஏற்க​னவே பல்​கலைக்​கழக கல்விக் கட்​ட​ணத்​தில் 50 சதவீத சலுகை வழங்​கப்​படு​கிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்​தைகள் மற்​றும் ஓய்​வு​பெற்ற ராணுவ வீரர்​களின் குழந்​தைகளுக்கு 100 சதவீத கல்விக் கட்​ட​ணச் சலுகை வழங்கப்படு​கிறது. இவ்​வாறு துணைவேந்​தர்​ தெரி​வித்​தார்​.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive