Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

30 மாணவர்களுக்கும் குறைவாக 14,829 அரசு துவக்க பள்ளிகள்; தமிழகத்தை அதிர வைக்கும் சேர்க்கை சரிவு

 தமிழகத்தில், 14 ஆயிரத்து 829 அரசு தொடக்கப் பள்ளிகளில், 30க்கும் குறைவான மாணவர்களே படித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், 24 ஆயிரத்து 349 அரசு தொடக்கப் பள்ளிகளில், 9 லட்சத்து 45 ஆயிரத்து 971 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. மாணவர் சேர்க்கை இன்றி, இந்தாண்டு, 246 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.

வசதிகள் குறைவு

மேலும், 10 மாணவர்களுக்கு கீழ் படிக்கும் 3,027 பள்ளி, 20 மாணவர்களுக்கு கீழ் 6,635 பள்ளி, 30 மாணவர்களுக்கு கீழ், 5,167 பள்ளி என, மொத்தம், 14 ஆயிரத்து 829 பள்ளிகள் உள்ளன. இதன்படி, தமிழகத்தில், 60.90 சதவீத பள்ளிகளில், 30க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கல்வியாளர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இருந்தாலும், சில பெற்றோரிடம் தனியார் பள்ளியே சிறந்தது என்ற எண்ணம் உள்ளது. பல அரசு பள்ளிகளில் கட்டடம், கழிப்பறை, ஆய்வகம், விளையாட்டு மைதானம், ஸ்மார்ட் வகுப்பறை போன்ற வசதிகள் குறைவாக உள்ளன.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருந்தால் போதுமானது. இதன்படி, 30 மாணவர்களுக்கும் கீழ் உள்ள பள்ளிகளில், தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர், 10க்கும் கீழ் உள்ள பள்ளிகளில் தலைமையாசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களே, அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்த வேண்டி உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
அபாயம்
பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் இல்லாததால், பெற்றோர் ஆரம்பத்திலேயே தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்.அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகப்படுத்த, மருத்துவ, தொழில் படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக் கும் மாணவர்கள் உயர்கல்வி பெற மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை உட்பட பல சலுகைகள் வழங்கப்பட்டன.இருப்பினும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதால், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு, அரசு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

gallerye_044752480_4323943






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive