Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில் அண்ணா பல்கலை "ஹவுஸ்புல்"


              பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருந்த இடங்கள், நேற்றுடன் நிரம்பிவிட்டன.

           மாநிலத்தில், 560 பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, சென்னை, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி., கல்லூரி ஆகிய, மூன்று கல்லூரிகளில் படிப்பதை, மாணவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

             மூன்று கல்லூரிகளில், கிண்டி பொறியியல் கல்லூரி, முதலிடத்தில் உள்ளது. கலந்தாய்வு துவங்கியதும், "டாப்" மாணவர்களில் துவங்கி, அனைவரும், கிண்டி பொறியியல் கல்லூரியையே தேர்வு செய்கின்றனர்.

             தரமான கல்லூரி, சகலமும் அடங்கிய உள்கட்டமைப்பு வசதிகள், படிக்கும்போதே, "கேம்பஸ் இன்டர்வியூ" மூலம், முன்னணி நிறுவனங்களில் வேலை ஆகியவை கிடைப்பதால், கிண்டி பொறியியல் கல்லூரி, மாணவர்களின் கனவாக உள்ளது.

             ஆனால், "கட்-ஆப்&' 200க்கு, 200ல் துவங்கி, 198 அல்லது 197 வந்த உடன், அண்ணா பல்கலை கல்லூரிகளில் உள்ள இடங்கள், மள மளவென நிரம்பிவிடும். பொதுப்பிரிவு கலந்தாய்வு, கடந்த, 21ல் துவங்கியது. ஆறாவது நாளான நேற்று முன்தினம் நிலவரப்படி, அண்ணா பல்கலை கல்லூரிகளில் உள்ள, 2,177 இடங்களில், 1,947 இடங்கள் நிரம்பியிருந்தன.

               ஏழாவது நாளான நேற்று, மீதமிருந்த, 230 இடங்களில், பெருமளவு இடங்கள் நிரம்பிவிட்டதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், இனி, பல்கலை உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் மீது, மாணவர்களின் கவனம் திரும்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive