NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.எட். பதிவு செய்யாமல் ஆசிரியர் பணியை இழக்கும் முதுநிலை பட்டதாரிகள்?

               இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை2-ஆவது முறை பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப் பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.

                   பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி முதல் தொடர்ந்து மேல் படிப்புகளை மாணவ, மாணவியர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புகள் வரை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் படிப்புகளாக பதிவுகளைச் செய்து வருவது வழக்கம்.ஐடிஐ, பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், பொறியியல் பட்டம் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை முடிக்கும் மாணவ, மாணவியர் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
           ஊட்டியில் துவங்கி கன்னியாகுமரி வரை 16 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாவட்டங்களுக்கு மதுரையில் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது.மேற்படி தொழில் படிப்புகளை இந்த அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளையும் இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.இதில் பட்டப்படிப்பு முடித்தவுடன் பி.எட். முடிக்கும் மாணவ,மாணவியர் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் தகுதியாக அதைப் பதிவு செய்கின்றனர். அதன்பிறகு, இதே மாணவ, மாணவியர் எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டத்தைப் பெற்றவுடன், அந்தப் படிப்பை மட்டும் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு நிறுத்திக் கொள்கின்றனர். அதாவது, பி.எட். படிப்பை ஏற்கெனவே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து விட்டதால், பதிவு மூப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என கருதி விடுகின்றனர்.இதனால், பி.எட். படிப்புடன் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாக, வேலைவாய்ப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
           மேலும் அவர் கூறுகையில், பலமுறை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் இது தொடர்பாக முதுநிலைப் பட்டம் பெறுவோருக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இளநிலைப் பட்டத்துடன் பி.எட். பதிவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தாலும், முதுநிலைப் பட்டம் பெற்றவுடன் மீண்டும் பி.எட். படிப்பை தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் கண்டிப்பாக இரண்டாவது பதிவு செய்ய வேண்டும். அப்போது தான், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் பரிந்துரையின்போது,தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படும் என்றார்.




5 Comments:

  1. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய அறிவியல் (SCIENTIFIC METHOD) அடிப்படையிலான வெயிட்டேஜ் முறை சில தினங்களில் அறிவிப்பு. +2, UG, BEd, and TET மதிப்பெண்களுக்கு சமமான வெயிட்டேஜ் வழங்கும் வகையிலான முறையில் மேற்கூறிய நான்கிற்கும் தலா 25….. (25+25+25+25=100)மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.கட் ஆப் மதிப்பெண்கள் இரு தசமத்திருத்தமாக 100 க்கு நிர்ணயிக்கப்படும். TET ஒரு தகுதித் தேர்வு என்பதாலும் UG & B.Ed ஆகியவையே ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி என்பதாலும் TET-ற்கான வெயிட்டேஜ் 60-ல் இருந்து 25- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (TET தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இப்புதிய முறை எதிராக அமையும். தொடர்ச்சியாக நன்றாக படித்தவர்களுக்கு பாதிப்பில்லை)
    உதாரணம்:
    +2+UG+ BEd+TET =100 for PAPER II ------(25+25+25+25=100)

    10+12+ DTEd+TET =100 for PAPER I------(25+25+25+25=100)

    பெற்ற மதிப்பெண்கள்

    +2 = 960 MARKS =80%
    UG= 70 %
    B.Ed= 80%
    TET=90 MARKS =60%
    உங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    +2 = 20 (25)
    UG= 17.5 (25)
    B.Ed= 20 (25)
    TET=15 (25)
    மொத்தம் = 72.5/100

    ReplyDelete
  2. Nengae ellam enga irynthu varinga....

    ReplyDelete
  3. in my face book id , i uploaded tet hall ticket and call letter

    ReplyDelete
  4. Bed pathivu seithutta udane marunale kuppittu velaoya koduthuttuthan maruvelai Ayyo Ayyo

    ReplyDelete
  5. Employmentla PG Bed pathivu seiythu muraiya 3 varusathukku orumurai renewallum seithen anal kadantha 20 varusama oru interview kanom , ithula pg kuda Bed pannathathu oru kuraiya

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive