ஜூன் 12ல் எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் :விண்ணப்பம் பெற 5 நாள் தான் இருக்கு!

             எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல், அடுத்த மாதம், 12ம் தேதி வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இதுவரை, 27 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றுஉள்ளனர். 
 
               தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்களும்; சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இந்த படிப்பு களுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம், மே 14ல் துவங்கியது. இதுவரை, 27,999 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்; இதில், 2,550 விண்ணப்பங்களை, மாணவர்கள் சமர்பித்து உள்ளனர். விண்ணப்பங்கள் பெற, இன்னும் ஐந்து நாட்களே (கடைசி நாள், மே 30) உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஜூன் 2ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். விடைத்தாள் மறுமதிப்பீட்டு விவரங்களை தர, மாணவர்களுக்கு, ஜூன் 10ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டு, ஜூன் 12ம் தேதி, தர வரிசை பட்டியலை வெளியிட, மருத்துவக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன் 18ல் தொடங்கும் என, தெரிகிறது.
1 Comments:

  1. vettriarasan5/26/2014 3:12 pm

    மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்தபின்னர் விண்ணப்பதாரர்கள் தான் மதிப்பெண் பட்டியலை தர வேண்டுமா? மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்தபின்னர் அரசு தேர்வுத்துறையிடமிருந்து ஒரு சி.டி பெற்று அத்னை மையப்படுத்தி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களின் மீண்டும் ஒரு முறை சரியாக உள்ளதா? என் ஏன் மருத்துவக் கவுன்சில் நடந்துபவர்கள சரிபார்த்து “தர வரிசை எண்ணை ” பின்னர தெளிவாக அனுப்பலாமே? விண்ணப்ப்தாரரருக்கு ஏன் 10ந் தேதி வ்ரை அவகாசம் கொடுக்கிறீர்கள். ரூபாய் 500.00 விண்ணப்பம் மற்றும் சேவைக்காக தானே வசூலிக்கிறீர்கள்? தர வரிசை வெளியிடும் போது நீங்கள் ஏன் திருத்திய மதிப்பெண் பட்டியல் சி,டி ஜ தேர்வுத்துறையிடமிருந்து பெற்று செய்ய ஏற்பாடு செய்யுங்க சார்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive