200 எஸ்எம்எஸ் உச்சவரம்பு ரத்து - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி!


           செல்போனில் தினசரி 200 எஸ்எம்எஸ் மட்டுமே அனுப்பலாம் என்ற டிராய் நிர்ணயித்த உச்ச வரம்பை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதனால், இனி எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பலாம். செல்போனில் ரியல் எஸ்டேட் முதல் உடல் எடை குறைப்பு வரை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் எஸ்எம்எஸ் தொல்லை அதிகரித்து வந்தது. இதை தடுக்க தினசரி அதிகபட்சமாக 100 எஸ்எம்எஸ் வரை
மட்டுமே அனுப்பலாம் என்ற உச்ச வரம் பை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த ஆண்டு அறிவித்தது. அது மிக குறைவான எண்ணிக்கை என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதையடுத்து, கடந்த நவம்பரில் எஸ்எம்எஸ் உச்ச வரம்பை 200 ஆக டிராய் உயர்த்தியது. எனினும், இது தனிநபரின் கருத்து பரிமாற்றம், பேச்சுரிமையை பாதிப்பதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் இருப்பதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விளக்கம் அளிக்க டிராய், மத்திய அரசுக்கு டிசம்பர் 6ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. தனிநபர் அனுப்பும் தினசரி 200 எஸ்எம்எஸ் உச்ச வரம்பு ரத்து செய்யப்படுவதாகவும், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட உச்ச வரம்பு தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive