NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு முதல்வரின் கையெழுத்து, முத்திரை ஆகியவற்றை போலியாக பயன்படுத்தி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


கன்னியாகுமரி மாவட்டம் கோட்டவிளையை சேர்ந்தவர் பெமிலா (35). இவர் சிவகங்கையில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவரது தந்தை பொன்னையன் பாதிரியாராக உள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரின்ஸ் எட்வின் (42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிரின்ஸ் எட்வின், தான் பத்திரிகை துறையில் பணியாற்றுவதாகவும், சென்னை ஆயிரம் விளக்கில் பிரின்டிங் பிரஸ் வைத்திருப்பதாகவும் பொன்னையனிடம் கூறியுள்ளார். பிரின்ஸ் எட்வின் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வந்ததால், பொன்னையனும் இதை நம்பியுள்ளார்.
இந்நிலையில், தன் மகள் பெமிலாவின் ஆசிரியர் பணி இடமாறுதலுக்கு உதவும்படி எட்வினிடம் பொன்னையன் கேட்டுள்ளார். இதற்காக ரூ.3 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து பிரின்ஸ் எட்வின், முதல்வர் ஜெயலலிதா படம் பதிக்கப்பட்ட அதிமுக லெட்டர் பேட் போல் தயாரித்து, அதில் பெமிலா எழுதுவது போல் ‘சிவகங்கை மாவட்டம் முப்பையூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனக்கு மகப்பேறு காலம் நெருங்குகிறது. என்னை பராமரிக்க இங்கு யாரும் இல்லை. எனவே, குமரி மாவட்ட குளித்தலை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசினர் மேல்நிலை பள்ளியில் பணி இட மாறுதல் தரும்படி கேட்டு கொள்கிறேன்’ என்று எழுதியுள்ளார்.
மேலும், அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்து மற்றும் முதல்வருக்கான முத்திரையையும் பதித்துள்ளார். பின்னர் இந்த கடிதத்தை முதல்வரின் தனிப்பிரிவில் கொடுத்துவிட்டார். இதேபோல் ஒரு கடிதத்தை தயாரித்து பள்ளி கல்வி துறை இயக்குனருக்கும் அனுப்பி விட்டார். கடிதத்தை பார்த்த பள்ளி கல்வி துறையினர், அதில் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்து ஆங்கிலத்தில் இருப்பதை பார்த்தனர். முதல்வர் போடும் கையெழுத்துக்கள் அனைத்தும் தமிழில் இருக்கும் நிலையில், இந்த கையெழுத்து அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடிதத்தின் நகல் ஒன்றை எடுத்து கொண்டு பள்ளி கல்வி துறை இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று கடிதம் குறித்து பிரின்ஸ் எட்வின் நேற்று விசாரித்துள்ளார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த பள்ளி கல்வி துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் சரவணன் தலைமையிலான போலீசார் நேற்றிரவு எட்வினை கைது செய்தனர். பின்னர், அவரது பிரின்டிங் பிரஸ்ஸில் இருந்த, ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் ரப்பர் ஸ்டாம்பு தயாரித்து கொடுத்த, ராயப்பேட்டையை சேர்ந்த முரளி (43) என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive