டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட குரூப்- 4 விடைகளில் குளறுபடி


          தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஜூலை 7ம் தேதி நடத்திய, குரூப்- 4 தேர்வுக்கான, உத்தேச விடைகள் அன்றைய தினம் இரவே வெளியிடப்பட்டன.
இதை எதிர்பார்த்துக் காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் விடைகளை பார்த்தனர். இதில் 97, 100, 111 ஆகிய மூன்று விடைகள், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
வினா, 97ல், "தவறான இணை எது&' என்பதற்கு, டென்னிஸ் - சானியா மிர்சா என்பது விடை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஹாக்கி - செய்னா நெய்வால் என்பதே சரியான விடை. அதே போல, 100வது வினாவில் குறியீடுகளே தவறாக இடம் பெற்றுள்ளன. 111வது, "பொருத்துக&' வினாவுக்கு, விடை தரப்படவில்லை.
"இவை, உத்தேச விடைகள் தான்; ஆட்சேபனை இருந்தால், ஏழு நாட்களுக்குள் தெரிவிக்கலாம். அதன்பின் இறுதி விடைகள் வெளியிடப்படும்&' என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தேர்வு எழுதியவர்கள், தவறான விடைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். சீராகச் சரி பார்த்த பின், விடைகளை இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கலாம் என, மாணவர்கள் கருதுகின்றனர்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive