குரு பகவான்  (5-7-2015) ஞாயிற்றுக்கிழமை இரவு 11.04 மணிக்கு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இன்று முதல் 1-8-2016 வரை இங்கு அமர்ந்து தன் அதிகாரத்தைச் செலுத்துகிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு, அனைவரும் சிரமமின்றி அவரவர் பகுதிக்கு அருகிலேயே உள்ள திருத்தலங்களுக்குச் சென்று பரிகார பூஜை, சிறப்பு வழிபாடுகள் செய்து வழிபடுவதற்கு வசதியாக, தமிழகம் முழுவதும் உள்ள சிறப்புத் தலங்கள், குரு பரிகாரத் தலங்கள் பற்றிய விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.