Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வீட்டுகட்ட முன்கடன் உள்ளிட்ட கடன்களை கழிக்காமல் வரி பிடித்தம் செய்யும் இந்திய வருமான வரி ஆணையகத்திற்கு ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கண்டனம்!

 IMG-20240425-WA0010

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வீட்டுகட்ட முன்கடன் உள்ளிட்ட கடன்களை கழிக்காமல் வரி பிடித்தம் செய்யும் இந்திய வருமான வரி ஆணையகத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - கண்டனம் 

IMG-20240425-WA0009

இந்திய ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ( I.F.H.R.M.S) இந்திய அளவில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஊதியத்தை ஒருங்கிணைத்து வழங்கப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்துவரும் சூழலில் வருமான வரி செலுத்துவதில் இரு திட்டங்களை உருவாக்கி குழப்பிவருகிறது இந்திய வருமானவருத்துறை பழைய முறை புதியமுறை என வகைப்படுத்தப்பட்டுள்ளது , ஏற்கனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் வீடுக்கட்ட முன் பணம் பெற்று வட்டியுடன் மாத தவணை செலுத்தி வருகின்றனர் அதோடு நின்று விடாமல் குழந்தைகள் கல்விகடன் வீட்டு வாடகை , பிள்ளகளின் திருமணம் உள்ளிட்ட குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு செலவினத்திற்காக தனிக்கடன் கடன் அதுமட்டும் அல்லாமல் இந்திய காப்பீடு கழகத்தின் மூலமாகவும் தனியார் காப்பீடு நிறுவனங்கள் மூலமாகவும் மாதம்  தவணை செலுத்துகின்றனர் மேலும் பண்டிகாலங்களில் செலவினங்களுக்கு முன் கடன் பெற்று அதற்கான தவணையும் செலுத்தி வருகின்றோம் இப்படி தான் ஒவ்வொரு அரசு ஊழியர்களும் தான் வாங்கும் ஊதியத்தில் நான்கில் மூன்று பங்குகளை அசல் வட்டியுமாக செலுத்தி குடும்பத்தை நடத்தி வருக்கின்றனர் , இப்படி இருக்கின்ற சூழலில் வீட்டு கடன் முன்பணம் மற்றும் வட்டி, காப்பீடு மாத தவணை, குழந்தைகளில் கல்விக் கடன், கல்வி கட்டணம் , மருத்துவம் சார்ந்து பிடித்தம் செய்யும் தொகை, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டதிற்கு பிடித்தம் செய்யும் தொகையையும் சேர்த்து கழித்து மீதம் வாங்கும் மாதம் ஊதியத்தை கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக பெறும் மாத ஊதித்தை கணக்கில் எடுத்துக் கொண்டு மாத வருமானம் செலுத்த தானாக பிடித்தம் செய்யும் விதமாக கணினிமையகாக்கட்டு வருமானவரியை பிடித்தம் செய்தால் எந்தவித்தில் நியாயமாக இருக்கும், இது ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்க்களின் வாழ்க்கையே சீரழிக்கும் செயலாகும்

ஆதலால் இந்தியாவின் முதன்மை முதல்வர்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் , மாண்புமிகு தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் அவர்களும் தலையிட்டு இந்திய அளவில் ஊதியம் வழங்கும் ( I.F.H.R.M S ) திட்டத்தை பின்பற்றாமல் மாநில அரசு மூலமாகவே ஊதியத்தை வழங்கவேண்டும் மேலும் ஏற்கனவே ஆண்டு வருவாயில் மேற்குறிப்பிட்ட முன் பணகடன் மற்றும் வட்டி,மற்றும் காப்பீட்டிற்கு செலுத்தும் தொகை ஆகியவற்றை கழித்து பெறும் ஊதியத்திற்கு மட்டுமே ஆண்டு வருமான வரி செலுத்தவும் விருப்பத்தின் பேரில் மாதமாதம் வருமானவரி செலுத்தவும் வழிவகை செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்,

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive