Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

உத்தர பிரதேசத்தில் முதல் குடிநீர் ஏ.டி.எம்: நடிகை ஹேம மாலினி திறந்து வைத்தார்


உத்தர பிரதேசத்தில் முதல் குடிநீர் ஏ.டி.எம்: நடிகை ஹேம மாலினி திறந்து வைத்தார்

       அவசர தேவைக்கு கார்டைத் தேய்த்தால் பணம் தரும் அதே ஏ.டி.எம். தான், உத்தர பிரதேச மக்களின் தாகத்தை தீர்க்கும் குடிநீரை தரும் இயந்திரமாகவும் மாறியிருக்கிறது. இதற்கென பிரத்யேகமாக வழங்கப்படும் கார்டை தேய்த்தால், பணம் வருவதற்கு பதிலாக குடிநீர் வருகிறது. குழந்தைகளுக்கு இந்த ஏடிஎம்-ல் குடிநீர் இலவசம். சவ்வூடு பரவல் ஆலை(RO) மூலமாக இதில் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு, வெறும் 2 ரூபாய் செலவில், 20 லிட்டர் சுத்தமான குடிநீர் கிடைக்கும்.  
            மதுரா மாவட்டத்தில் உள்ள சோங்க் நகரில் உத்திர பிரதேச மாநிலத்தின் முதல் குடிநீர் ஏடிஎம்-மை, பழம்பெரும் நடிகையும் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினருமான ஹேம மாலினி இன்று திறந்து வைத்தார்.

துவக்க விழாவில் பேசிய அவர், மாவட்டத்தின் குடிநீர் பஞ்சத்தை தீர்க்க மேலும் பல நடவடிக்கைகள் தேவையென்றும், பெண்களுக்கெதிரான வன்முறை தடுக்கப்பட வேண்டுமென்றும், புதிய சவால்களை எதிர் கொள்ளும் வகையில் சமூகம் விழித்துக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.




1 Comments:

  1. nice plan. when these plans are enter in tamilnadu?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive