இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்


இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்
           ஐ-போன் பிரியர்களை ஆச்சரிப்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை  வெளியிட முடிவு செய்திருப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய போன்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக வெளியிடப்பட இருக்கும் 3 ஐ-போன்களில் ஒன்று ஐ-போன் 6 சி-ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஐ-போன் 6-ன் 4.7 இஞ்ச் திரையை விட சற்று குறைவாக 4 இஞ்ச் திரை மற்றும் ஏ8 சிப் கொண்டதாக இருக்கும். இத்துடன் வரவிருக்கும் மற்ற இரண்டு போன்களும் ஏ8 சிப்யை விட அதிக திறன் கொண்ட சிப்பை கொண்டிருக்கும் என அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
    

இந்த புதிதாக 3 ஐ-போன்களுடன் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐ-போன் 6 மற்றும் 6 ப்ளஸ் போன்களின் மேம்படுத்தப்பட்ட வடிவங்களும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive