Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வரலாற்று சாதனைஉலக பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை சாய்னா நேவால் படைத்துள்ளார்அதோடு கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பிறகு பேட்மிண்டன் தரவரிசையில்
முதலிடத்துக்கு முன்னேறியுள்ள முதல் சீனர் அல்லாத வீராங்கனை என்ற பெருமையையும் சாய்னா நேவால் பெற்றுள்ளார்.
டெல்லியில் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த  முதல் அரையிறுதியில் சாய்னாவுடன் முதலிடத்தை கைப்பற்ற போட்டியாக இருந்த ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மெரின்  இந்தோனேஷிய  வீராங்கனை ரக்ன்டாக் இன்டேனிடம் தோல்வியடைந்தார்.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால்  21-15,21-11 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீராங்கனை யூகி ஹசிமோட்டாவை வீழ்த்தினார். நாளை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இந்தோனேஷிய வீராங்கனை ரக்ன்டாக்  இன்ட்சானுடன்  சாய்னா நேவால் பலப்பரீட்சை நடத்துகிறார்.

அரையிறுதி ஆட்டத்தில்தோல்வியடைந்தாலும் கூட சாய்னா நேவால் முதலிடத்தை பிடித்திருப்பார்சாய்னா நேவால் 75  ஆயிரத்து 561 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடம் பெறுவார். அரையிறுதி வரை முன்னேறியதற்காக சாய்னாவுக்கு 6 ஆயிரத்து 420 புள்ளிகள் கிடைத்துள்ளது. அதேவேளையில் அரையிறுதி வரை முன்னேறிய கரோலினா மெரினுக்கும் 6 ஆயிரத்து 420 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. எனினும் கரோலினா 73 ஆயிரத்து 618 புள்ளிகளே பெறுகிறார். அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தரவரிசையில் சீன வீராங்கனை லீ  செயேரெ 79 ஆயிரத்து 214 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார் . ஆனால் லீ இந்த தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் 7800 புள்ளிகள் வரை அவர் இழக்க நேரிட்டது.


இதற்கு முன் கடந்த 1980ஆம் ஆண்டு இந்திய பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோன் தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார். அதற்குபின் பேட்மிண்டன் உலகில் இத்தகைய அரிய சாதனையை நிகழ்த்தியுள்ள மற்றொரு இந்தியர் சாய்னா நேவால்தான்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive