புதுச்சேரியில் ஆசிரியர் காலியிடங்கள்.


         தமிழக நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அந்த அரசின் சார்பாக 19 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

          வயது:புதுச்சேரி அரசின் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.06.2014 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும் 32வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

              கல்வித் தகுதி:டீச்சர் எஜூகேஷனில் டிப்ளமோ படிப்பு அல்லது 2 வருடம் படிக்கக் கூடிய பேஸிக் டீச்சர் டிரைனிங்கில் சான்றிதழ் படிப்பை என்.சி.டி.இ.,அங்கீகாரத்துடன் முடித்திருக்க வேண்டும். இந்தப் படிப்பை பிளஸ் 2விற்கு நிகரான படிப்பை முடித்த பின்னால் படித்திருக்க வேண்டும். பிளஸ் 2 அளவிலான படிப்பு வரை தமிழை ஒரு மொழிப் பாடமாகவும் படித்திருக்க வேண்டும். இதனுடன் சி.பி.எஸ்.இ., அல்லது தமிழக அரசு நடத்தும் டீச்சர்ஸ் எலிஜிபிலிடி டெஸ்ட் (டி.டி.இ.டி., அல்லது டி.என்.டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் தங்கள் முழுமையான விபரங்களை உள்ளடக்கிய பயோ-டேட்டா படிவத்துடன் பிறப்பு சான்றிதழ் அல்லது பிறந்த தேதியை உள்ளடக்கிய பள்ளித் தேர்வு வாரியம் வழங்கும் சான்றிதழ் நகல் உள்ளிட்ட இதர ஆவணங்களின் நகலுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The Director of School Education,
Perunthalaivar Kamarajar Centenary Educational Complex,
100 Feet Road, Anna Nagar,
Puducherry - 605 005

விண்ணப்பிக்க இறுதி நாள்:30.06.2014

இணையதள முகவரி:

https://py.gov.in/citizens/recruitments/DSE10062014.pdf
2 Comments:

  1. In Pondicherry pass mark for TET is 90 or 82 Pls reply

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive