60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் ஜெயலலிதா

சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் ஜெயலலிதா.     சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா நேரில் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்வின்போது, தமிழக ஆளுநர் ரோசய்யா உடன் இருந்தார்.

     பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் 5 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை திங்கள்கிழமை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.

ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்த சென்னை வந்தார். பின்னர் குண்டு துளைக்காத ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டார்.

ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, சென்னை வந்து, உடனடியாக டெல்லி திரும்புகிறார். பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக சென்னை மோடி சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.




1 Comments:

  1. வட மாநிலங்களில் உள்ள அரசியல் நாகரிகம் இங்கும் வேர் விட தொடங்கிவிட்டது.நல்ல முன்னேற்றம் வளர்க.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive