NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 8.6.17

மேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வரக்கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ரிஷபம்
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
மிதுனம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுக்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
கடகம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
சிம்மம்
நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கன்னி
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். சிலரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
தனுசு
சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
மகரம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கும்பம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். பணவரவு உண்டு. தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
மீனம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
 
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive