Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் நன்னெறி கல்வி: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

     பள்ளி, கல்லுாரிகளில் நன்னெறி கல்வி கற்பித்தலை துவக்கி, மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் அமைக்கக் கோரிய வழக்கில், 'இதுபற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுஉள்ளது.

பிஎட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்

       பிஎட் மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக உயர்கல்விதுறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின்  கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 672 பிஎட் கல்லூரிகளுக்கான  மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.  வரும் 10ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.

‛இ-பைலிங்’ மூலம் வருமான வரித் தாக்கல்: 7-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

       ‛ஆன்-லைன்’ மூலம் ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

'கேட்' தேர்வு தேதி அறிவிப்பு

         இன்ஜி., முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பில் சேர்வதற்கான, 'கேட்' பொது நுழைவுத்தேர்வுக்கு, அக்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC : நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

         நெடுஞ்சாலைத்துறையில் உதவிப்பொறியாளர்கள் காலிப்பணியிடங்கள் 213 உள்ளன. இந்த இடங்களுக்கு சரியான பட்டதாரிகளை தேர்ந்து எடுப்பதற்கான எழுத்துத்தேர்வு 6–ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

TNPSC : பொதுப்பணி இன்ஜி., பணிக்கு தேர்வு பட்டியல் வெளியீடு

        பொதுப்பணித் துறையில், 98 உதவி பொறியாளர் காலியிடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தேர்வர் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.

1,078 எஸ்ஐகளை தேர்வு செய்ய இன்று முதல் நேர்முகத் தேர்வு

       தமிழகம் முழுவதும் 1,078 எஸ்ஐகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு இன்று காலை தொடங்குகிறது. சென்னை எழும்பூரில் உள்ள  பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒன்றரை மாதம் வரை நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கட்டாயம்

         இன்ஜி., மாணவர்கள் சிலருக்கு, 'டெங்கு' காய்ச்சல் அறிகுறி உள்ளதை தொடர்ந்து, அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, நிலவேம்பு கசாயம் அருந்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

"ஜேம்' 2016: விண்ணப்பிக்க அக்.14 கடைசி

        ஐஐடிக்கள், இந்திய அறிவியல் நிறுவனத்தில் வழங்கப்படும் எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்புகளில் சேருவதற்கான "ஜேம்' 2016 ஒருங்கிணைந்த சேர்க்கை தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TET COURT NEWS: உச்சநீதிமன்றம் டி.இ.டி வழக்கில் வின்சென்ட்டுக்கு நோட்டீஸ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

      01.09.2015 நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளில் இந்த 5 சதவீத மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய காரணமான திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் அவர்களின் பதிலை அறியும் பொருட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது... 
இவ்வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது... 

TET ARTICLE : ஆசிரியர் தகுதித்தேர்வின் இழுபறிக்கு காரணம் என்ன? அப்பாயின்மென்டுக்கு ஆபத்தா?


ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின்  முந்தைய விவரம் : 

          தமிழ்நாடுஅரசு டி.ஆர்.பி மூலம் 2013ம் அண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி 90மதிப்பெண்களை பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக கருதி அவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது, பின்னர் தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் திடீரென்று 5சதவீத இடஒதுக்கீடும் வெயிட்டேஜ் என்னும் தகுதிகாண் முறையையும் அறிமுகப்படுத்தியது.. அதில் வெயிட்டேஜ் வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்தது, அதே சமயத்தில் திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கு வெற்றிபெற்று 5சதவீத மதிப்பெண் சலுகை கொடுத்தது தவறு என்று ரத்து செய்து உத்ததரவிட்டது ....

Flash news ஆசிரியர் தகுதித் தேர்வு உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • இன்று 01.09.2015  வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் வந்தது
  • இதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியதை எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் விசாரனைக்கு வந்தது

TNPSC : இன்னும் ஒரு வாரத்தில் குரூப் 2 முதனிலைத் தேர்வு முடிவுகள்

       1241 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப் 2 முதனிலைத் தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் தெரிவித்தார்.

தேசிய நல்லாசிரியர் விருது: 25 ஆசிரியர்கள் தேர்வு

       தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தமிழகத்தில் இருந்து 15 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 7 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்

       இன்று நடக்கவிருக்கும் வேலை நிறுத்த போராட்டத்தினால், பள்ளிகள் செயல்படுவதில் தடை ஏற்படாது என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

செப்.8-இல் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை


     ஏர்வாடி தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலான ராணுவப் பள்ளி கேட்டு மத்திய அரசுக்கு மாநிலங்கள் கடிதம்: 'தமிழகத்திடம் இருந்து கோரிக்கை இல்லை'

       கூடுதலான ராணுவப் பள்ளிகள் கேட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 15 மாநிலங்களின் அரசுகள் கடிதம் எழுதியுள்ளன. ஆனால், இப்பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

"காலாவதியான எல்.ஐ.சி. பாலிசிகளை புதுப்பிக்க 2 மாதம் வரை சிறப்பு முகாம்'

        பிரீமியம் தொகை செலுத்தாமல், காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் அக்டோபர் இறுதி வரை நடைபெறும் என, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) தென் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
 

கல்வியில் மறுமலர்ச்சி

விரைவில் கல்லூரிப் பேராசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

           கல்லூரிப் பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார். 
 

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க சமச்சீர் கல்வி காரணமா? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

       மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க சமச்சீர் கல்வி காரணமா? என்பது குறித்த விவாதம் நடந்தது. 

பி.இ. முடித்தவர்கள் பி.எட். படிக்கலாமா? அமைச்சர் விளக்கம்

       தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே பொறியியல் முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார்.

 

மாவட்டக் கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு பெற உள்ளவர்களுக்கு, பயிற்சி

        பள்ளிகளில், ஆசிரியர்களின் வருகை மற்றும் கல்வித்தரத்தை ஆய்வு செய்வது எப்படி என்பது குறித்து, மாவட்டக் கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு பெற உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது.
 

தொழிற்சங்கங்கள் இன்று 'ஸ்டிரைக்': தமிழகத்தில் பஸ், ஆட்டோ ஓடுமா?

        கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அளவில், தொழிற்சங்கங்கள், இன்று, 'ஸ்டிரைக்' நடத்துவதால், பஸ், ஆட்டோக்கள் ஓடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வங்கி பணிகள் முடங்குவதோடு, மாநில அரசு அலுவலகங்களின் செயல்பாடும் பாதிக்கும் நிலை உள்ளது.

இந்தியா முழுவதும் ஒரே அட்டையில் பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கலாம்: விரைவில் அறிமுகம்

         இந்தியாவின் எந்த ஒரு ஊரிலும் உள்ள மெட்ரோ ரயில்கள், வழக்கமான ரயில்கள், பேருந்துகளில் பயணிப்பதற்காக பொதுவான ஒரு பயண அட்டையை அறிமுகப்படுத்த மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்

     விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனஇதில்,
 

தனியார் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு அமைச்சர் கே.சி.வீரமணி

         இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
 

TNTET CASE : உச்சநீதிமன்றத்தின் டி.இ.டி வழக்குகளின் நேரலை தொகுப்பு 01.09.2015

உச்சநீதிமன்றத்தில் இன்னும் வழக்குகள் விசாரனைக்கு வரவில்லை.. இன்னும் சில நிமிடங்களில் வந்து விடும் ( ஆதாரம் ) 10:25 PM

9th Tamil 1st Term Study Material

1st Term
  1. 9th standard 1st Term Tamil 1 Mark Question & Answers | Mr.Manigandan.R, GHS, Melatur - Click Here
  2. All other CCE Study Materials - Click Here

Prepared by,
Mr. Manigandan. R
9th C Section,
GHS, Melatur, Thanjavur Dt.


TNTET : ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது...

        உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் கோர்ட் எண்.9ல் வழக்கு எண்.3 ஆவதாக இன்று (1.9.2015)விசாரணைக்கு வருகிறது...

12th Chemistry Study Material

Chemistry
  1. Chemistry 1 Mark & 3 Mark Questions | Vanavil Centre - Tamil Medium
Prepared by
Mr. P. Sakthivel, P. Vinayaga Moorthy, P. Saraswathi,

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive