NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சுவாதி கொலையாளி சிக்கினான்!

சென்னையில் மென்பொறியாளர் சுவாதியை கொடூரமாக கொன்ற கொலையாளி ராம்குமாரை, செங்கோட்டை அருகே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசாரை கண்ட கொலையாளி, பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான்.

சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் மென் பொறியாளர் சுவாதி, கடந்த 24ம் தேதி(ஜூன் 24) சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்மநபரால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் கமிஷனர் சங்கர் தலைமையில் 8 தனிப்படை போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் செங்கோட்டை அருகே தனது தாத்தா வீட்டில் மறைந்திருந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரியை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு ராம்குமார் முயற்சி செய்துள்ளான். இதனையடுத்து செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும், நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவனுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது.
கொலையாளி சிக்கியது எப்படி?
ஒருதலைக்காதல்:
ராம்குமார் செங்கோட்டை அருகிலுள்ள மீனாட்சிபுத்தை அடுத்த பன்பொழி கிராமத்தை சேர்ந்தவன். ஆலங்குளம் பொறியியல் கல்லூரியில் பி,இ., படித்தவன். வேலை தேடி சென்னை சென்ற ராம்குமார், சூளைமேட்டிலுள்ள மேன்ஷன் ஒன்றில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளான். அப்போது சுவாதியுடன் ராம்குமாருக்கு ஒருதலைக்காதல் ஏற்பட்டுள்ளது. ராம்குமார் 3 மாதமாக முயற்சித்தும் தனது காதலை சுவாதி ஏற்காததால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து அரிவாளால் வெட்டி கொடூரமாக கொன்றுள்ளான். இதற்கு அவனது நண்பர் ஒருவரும்உதவி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிப்படை:
இக்கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கொலையாளி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த போதும், தெளிவற்ற உருவமாக இருந்ததால் அவனைஅடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து கூடுதல் கமிஷனர் சங்கர் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டது.
மொபைல் போன் மாயம்:
கொலை செய்யப்பட்ட சுவாதியின் மொபைல் போனை கொலையாளி சம்பவ இடத்திலிருந்து எடுத்து சென்றுள்ளான். இதனையறிந்த போலீசார், சுவாதியின் நண்பர் ஒருவரின் எண்ணிலிருந்து சுவாதியின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., ஒன்றை உடனடியாக அனுப்பியுள்ளனர். கொலை நடந்த நாளன்று காலை 8 மணி முதல் 8.10 மணி வரை சுவாதியின் மொபைல் போனை கொலையாளி ஆன் செய்து வைத்துள்ளான். அப்போது எஸ்.எம்.எஸ்., டெலிவரி ஆகியுள்ளது. இதனை வைத்து ஆய்வு செய்த போலீசார், செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியில் இருந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து கொலையாளியின் புகைபடத்தை கொண்டு, சூளைமேடு பகுதியில் வீடுவீடாக போலீசார் சோதனை நடத்தினர்.
மேன்ஷன் காவலாளி கொடுத்த துப்பு:
கொலையாளியின் புகைபடத்தை பார்த்த சூளைமேடு பகுதியிலுள்ள மேன்ஷன் காவலாளி ஒருவர்போலீசாரிடம், துப்பு கொடுத்துள்ளார். போலீசாரிடம் கொலையாளி ராம்குமார் போல் உள்ளான் எனவும், நெல்லையை சேர்ந்தவன் எனவும் காவலாளி தெரிவித்துள்ளார். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், கொலையான நாளிலிருந்து ராம்குமார் மேன்ஷனிலிருந்து மாயமாகி இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து நெல்லை விரைந்த தனிப்படை போலீசார், ராம்குமாரின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
Advertisement
தற்கொலை முயற்சி:
நள்ளிரவில் போலீசாரை கண்ட ராம்குமார், தனது கையிலிருந்த பிளேடால் கழுத்தை அறுத்துள்ளான். உடனடியாக அவனை கைது செய்த போலீசார், செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை நடந்த போது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டையை போலீசார் கைபற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒப்புதல்:சுவாதியை கொலை செய்ததாக ராம்குமார் ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை:ராம்குமாரின் கழுத்தில் எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அறுவை சிகிச்சைக்குப்பின் ராம் குமார் பேச ஆரம்பித்தான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை :ராம்குமாரின் தந்தை பரமசிவம், தாய் மற்றும் அவரது சகோதரி, சகோதரர் ஆகிய 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூளைமேடில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை அழைத்து வர முடிவு:ராம்குமாரை சென்னை அழைத்து வர போலீசார் முடிவு செய்துள்ளனர். அவன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்களை தர போலீசார் மறுத்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive