சித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை

          சென்னை;'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது; 
 
             இன்றே கடைசி நாள்' என, இந்திய மருத்தும் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெளிவுபடுத்தி உள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன.
இதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று முன்தினம் முடிந்தது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று கடைசி நாள். இதுவரை, 5,100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை அதிகாரி கூறுகையில், 'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் பெறவும், சமர்ப்பிக்கவும், ஒரு மாத காலம் அவகாசம் தரப்பட்டது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது. இன்று மாலைக்குள் விண்ணப்பிப்பது அவசியம்' என்றார்.

Share this