NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜூன் 10-ல் 'நீட்' தேர்வு: பாடத்திட்ட விவரம் வெளியீடு.


  
                  2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டசெய்திக் குறிப்பு:
 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுதேர்வினை தேசிய தேர்வுகள் ரியம் நடத்த உள்ளது. பாடத்திட்டம் பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு 2017 ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வு கணினிஅடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால் நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின் சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற்ற எம்.டி/ எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து 200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும். இந்தத் தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கான ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை பருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்த வகுப்புகளுக்கு நடத்தப்படும். 1956 இந்திய மருத்துவ சபை சட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள் அளவிலோ எந்த ஒரு பல்கலைக்கழகம் / மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வு செல்லுபடி ஆகாது.

 'நீட்' தேர்வின் முக்கியத்துவம்:

 NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்பு பாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆகும்.2017-ம் கல்வி ஆண்டுக்கான இந்தத் தேர்வில் நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவை அடங்கி இருக்கும். 'நீட்' தேர்வின் கீழ் வராத நிறுவனங்கள் அகிலஇந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்ட மேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய நிறுவனங்கள் NEET-SS –ன் கீழ் வராது.தேசிய தேர்வுகள் வாரியம் மத்திய அரசால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்திய அடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவது அதன் முக்கிய நோக்கமாகும்.

தேசிய தேர்வுகள்வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்டமேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்கு NEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டு NEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையான காலத்தில் அகில இந்திய பட்ட மேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive