NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கிறிஸ்தவ தேவாலயங்களின் சீரமைப்புக்கான நிதிஉதவிக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னை, கிறிஸ்தவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிக்கான
நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.நிதிஉதவி திட்டம் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் சொந்த கட்டிங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் (2016–17) நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின்கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிதியுதவி கோரப்படும் கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கிவர வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடமும், தேவாலயமும் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.தேவாலய சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருக்கக் கூடாது. இதற்கான சான்றிதழ் அளிக்கவேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.விண்ணப்பம் இதற்கான விண்ணப்ப படிவத்தை சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய மாவட்ட கலெக்டருக்கு ஜனவரி 31–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் www.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. இதை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து, தேவாலயங்களை ஆய்வு செய்து கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யும்.வங்கிக் கணக்கில் நிதி பின்னர் மாவட்ட கலெக்டரால் உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive