NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Rasipalan 5.12.2016

மேஷம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
மிதுனம்
இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்
கடகம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இரவு 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
சிம்மம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கன்னி
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
துலாம்
தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
விருச்சிகம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
தனுசு
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
மகரம்
இரவு 8 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். யாரையும் பகைத்துக் கெள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கும்பம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரியிடம் விவாதம் வேண்டாம். இரவு 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
மீனம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive