NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Space X தோல்வி: விழிபிதுங்கும் நிறுவனம்!

     நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் உலகளவில் முதன்மையான ஆராய்ச்சி அமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே. நாசாவின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்துவருவது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு தேவையான பொருட்களைத் தயாரிக்கும் Space X நிறுவனமாகும்.



நாசாவில் இருந்து அனுப்பப்படும் விண்கலம் அனைத்தும் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படுபவை. மக்களை பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் இடையே விண்கலம் மூலம் பயணிக்க வைக்கவேண்டும் என்ற திட்டம் தான் Space X நிறுவனத்தின் மிகப்பெரிய எதிர்காலக் கனவு. மெக்ஸிகோவில் நடைபெற்ற 67வது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டிலும் இத்திட்டத்தைப் பற்றி தெளிவாக விளக்கினார் அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்.

இதுகுறித்து பல கட்ட ஆராய்ச்சிகளும், வேலைகளும் நடந்துவந்த நிலையில், Space X நிறுவனம் இந்தாண்டு விண்ணுக்கு அனுப்பிய விண்கலங்களில் நான்கு விண்கலங்கள் செயலிழந்து கடலில் விழுந்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில் இந்த நான்கு விண்கலமும் செவ்வாய் கிரகத்துக்கு மக்களை அனுப்ப வேண்டி தொடங்கப்பட்ட ஆராய்ச்சியின் தொடக்கம் என்பது தான்.

2020-க்குள் 100 முதல் 200 பயணிகளை செவ்வாய் கிரகத்துக்கு கொண்டு செல்லும் விண்கலத்தை தயாரித்துவிடுவோம் என அதன் நிறுவனர் எலான் மஸ்க் விண்வெளி மாநாட்டில் தெரிவித்தார். இதனால், Space X நிறுவனம் இலக்கை எட்டிவிட வேண்டும் என தன் மீது டென்ஷனை போட்டுக் கொண்டு சொதப்பி வருகிறது என்பதை அறிவியல் வல்லுனர்கள் யூகித்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive