Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வருட பலன் 2017 - மீனம்

மீனம்
சச்சரவுகளுடன் வருபவர்களை சமாதானப்படுத்துபவர்களே! உங்களுடைய ராசிக்கு 2-வது ராசியில் இந்த 2015-ம் ஆண்டு பிறப்பதால் பணப்பற்றாக்குறை நீங்கும்.
அடுத்தடுத்து பணவரவு உண்டு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வி.ஐ.பிகள் ஆதரவாக இருப்பார்கள். பக்குவமாகப் பேசி பல முக்கிய காரியங்களையெல்லாம் முடிப்பீர்கள். முகம் மலரும். சோர்வு நீங்கும். கடந்த காலத்தில் நல்ல வாய்ப்புகள் வந்தும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டீர்களே! இப்போது வரும் நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். உங்களுடைய ராசிநாதன் குருபகவான் 5-ம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் எதிலும் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. குழந்தை பாக்யம் கிட்டும். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். உங்கள் இருவருக்குமிடையே பிரச்னைகளை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். ஆனால் ஜீலை மாதம் முதல் குருபகவான் 6-ல் சென்று மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். ஆடம்பரச் செலவுகள் வேண்டாம். அநாவசியப் பேச்சுகளையும் நீங்கள் குறைப்பது நல்லது. சிலர் உங்களுடைய நடவடிக்கைகளை வேவு பார்க்கக் கூடும். சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த முயற்சியும் வேண்டாம். பிரபலங்களுடன் சின்ன சின்ன மோதல் வரும். ஜீலை மாதம் முதல் நீங்கள் நாவடக்கத்துடன் செயல்படுவது நல்லது. உங்களிடமிருக்கும் ரகசியங்களை வெளியிட வேண்டாம். ஆரோக்யத்திலும் அக்கறை காட்டுங்கள். மஞ்சள் காமாலை வரக்கூடும். சிறுசிறு வாகன விபத்துகளும் நிகழக்கூடும். காசோலை தருவதற்கு முன்பாக வங்கி சேமிப்பு கணக்கில் இருப்பு எவ்வளவு இருக்கிறது என சரி பார்த்து தருவது நல்லது. யாருக்கும் அநாவசியமாக உறுதிமொழி தர வேண்டாம். உங்களுடைய ராசியிலேயே கேது அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டேப் போகும். படபடப்பு இருக்கும். சில நேரங்களில் சிலரை நினைத்து கோபப்படுவீர்கள். சுற்றியிருப்பவர்களில் யாருமே உண்மையாக நடந்துக் கொள்ளவில்லையென ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலைச்சுற்றல், உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி வந்துப் போகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் ராகு நிற்பதால் கணவன்-மனைவிக்குள் சில நேரங்களில் கடுமையான வாங்குவாதங்கள் வரும். பின்னர் சரியாகும். மனைவிக்கு மாதவிடாய் தள்ளிப் போகும். தைராய்டு இருக்கிறதா என பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உங்களுடைய நெருங்கிய நண்பர்களை ஜீலை மாதத்திலிருந்து யாருக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டாம். உங்களுடைய ராசிக்கு சனிபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சையும், ஆரோக்ய குறைவும் உண்டாகும். அவருடன் மனஸ்தாபமும் வரக்கூடும். உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் சூரியன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதி பைசலாகும். வருடம் பிறக்கும் போது உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் சுக்ரன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். சேமிப்புகளும் உண்டு. ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்து வாங்குவீர்கள். மூத்த சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். வேலையாட்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஒத்துழைக்காத பங்குதாரர்களை நீக்கி விட்டு புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். செல்வாக்குள்ள பங்குதாரர்களை சேர்க்க வாய்ப்பிருக்கிறது. கமிஷன், புரோக்கரேஜ், ரியல் எஸ்டேட், மருந்து, பெட்ரோ-கெமிக்கல், ஸ்டேஷனரி, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களாலும் லாபம் அதிகரிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புது யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்காக நீங்களும் மூத்த அதிகாரிகளிடம் வாதாடி சில முக்கிய சலுகைகளை பெற்றுத் தருவீர்கள். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading