NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி சேர்க்கைக்கு ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே 18 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    கல்வி உரிமைச் சட்டம் தனியார் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
   இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

      குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலும் கூடுதலாக வழங்கப்படுகிறது.அதன்படி வரும் 2017 -2018 -ஆம் கல்வியாண்டுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 9,000 சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிக், மழலையர், தொடக்கப்பள்ளி) நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் 1,26,262 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய, தமிழகம் முழுவதும் உள்ள 10,000 -க்கும் மேற்பட்ட அரசு இ -சேவை மையங்களைப் பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்குமுன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்படும்.
மாவட்ட வாரியான சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதிப்பள்ளிகளின் பட்டியல் மற்றும் அந்தப் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த சேர்க்கைக்கு ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே 18 -ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive