Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET- - சில அறிவுறுத்தல்-Mr.Alla Baksh‎

    காலை எட்டரை மணிக்கு எல்லாம் தேர்வு மையத்துக்கு வர சொல்லி இருக்காங்க. அதானால நைட் எல்லாம் தூங்காமல் இருக்காதீங்க. அலாரம் வச்சிட்டு நிம்மதியாக தூங்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத போங்க.  
ஹால் டிக்கெட் ஏற்கனவே Download பண்ணி வச்சு இருப்பீங்க. அதை ரெண்டு ஜெராக்ஸ் போட்டு வீட்டில் எங்கேயாவது பத்திரமாக வைங்க. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேர்வு முடிவு பார்க்க ஹால் டிக்கெட் முக்கியம்.

தேர்வுக்கு போகும் போது ஒரு பாட்டில் தண்ணீர் கொண்டு போங்க. வெயில் காலம் நாக்கு உலர்ந்துடும். அதனால் டயர்டா feel ஆகும். தண்ணீர் குடிச்சுட்டு எக்ஸாம் எழுதலாம்.

காலையிலே பொங்கல், தயிர் சாதம் போன்றவற்றை சாப்பிடாதீங்க. இவை இரண்டுமே தூங்க வைக்கும்.

கேள்வித்தாள் வாங்கியதும் உடனே எல்லாத்தையும் படிச்சுட்டு எழுத இது பள்ளி தேர்வு கிடையாது. உங்களுக்கு எந்த பாடத்தின் (தமிழ் , ஆங்கிலம் , சைக்காலஜி , அறிவியல் மற்றும் கணிதம், சமூக அறிவியல் ) மீது அதிக நம்பிக்கை உள்ளதோ அந்த பாடத்தின் கேள்விகளை மட்டும் நன்கு படித்து புரிந்து கொண்டு அந்த பகுதி வினாக்களுக்கான விடைகளை சரியான எண்களை பார்த்து விடைத்தாளில் குறிப்பிடுங்கள். பிறகு மற்ற வினாக்களை முடிக்கலாம்.

தேர்வு மையத்தில் உங்கள் நண்பர்களும் தேர்வு எழுத வந்து இருப்பார்கள். அவர்களில் பலர் புத்தகங்களை வைத்து படித்து கேள்விகளை கேட்டு கொண்டு இருப்பார்கள். அப்படிபட்டவர்கள் இருக்கும் பக்கம் போக வேண்டாம்.

தேர்வுக்கு சில மணி நேரங்கள் இருக்கும் நிலையில் தேர்வு மையத்தில் படிப்பதை தவிர்க்கவும்.

தேர்வு எழுதும் போது பிறரை வேடிக்கை பார்ப்பதை தவிர்க்கவும். இது நேர விரயத்தை ஏற்படுத்தும்.

தேர்வை நல்ல முறையில் எழுதி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive