NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போலீஸ் தேர்வு விதிகளில் தளர்வு: ஐகோர்ட் வலியுறுத்தல்

            'டில்லியில் ஒருவர் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு இருந்தால், ஒரு குழு அமைக்கின்றனர். அவரின் பின்புலத்தை விசாரித்து, சாதாரண குற்றச்சாட்டு என உறுதியானால், பணி வழங்கப்படுகிறது. அதை தமிழகத்தில் பின்பற்றலாம்,' என மதுரை ஐகோர்ட் கிளை வலியுறுத்தியது.

மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

       மதுரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கூடுதல் தேர்வாணையர் மாதவன் தெரிவித்துள்ளதாவது:

கேந்திரிய இந்தி சமிதி முடிவுகள் தமிழக பல்கலைக்கழகங்களை கட்டுப் படுத்தாது : தமிழக முதல்வர் உறுதி!!

           கேந்திரிய இந்தி சமிதி கூட்ட முடிவுகள் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்பதை பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பி.எட்., பயில 'புரவிஷனல்' சான்றிதழ் கட்டாயம்; ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவிப்பு

          பி.எட்., கல்வி பயில புரவிஷனல் சான்று கட்டாயமாக இணைக்க வேண்டும் என,   தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது. ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டு பி.எட்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலையில் நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், முதல் முறையாக ஆன்லைன் முறையிலான விண்ணப்ப வினியோகம் அறிமுகம் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும், 29 மையங்களில் விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்பட்டன.

கூடுதல் பணியிட 'ஆசிரியர்களுக்கு சம்பளம்'..

             மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் கலந்தாய்வு ஜூன் 26ல் நடந்தது.அப்போது மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட உபரி(சர்பிளஸ்) ஆசிரியர்களை 'பணி நிரவல்' அடிப்படையில் வேறு மாவட்டங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. 

பட்டச்சான்று நடைமுறை பல்கலையில் மாற்றம்

           மதுரை காமராஜ் பல்கலையில் மாணவர்கள் பட்டச்சான்று பெறும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இப்பல்கலை மற்றும் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பிரிவு உள்ளிட்ட பட்டப் படிப்பு முடித்தவர்கள், பட்டச்சான்றிதழ் கோரி, தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர். 
 

CTET: 21ம் தேதி நடைபெற உள்ள மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட்

             வரும் 21ம் தேதி நடைபெறுகின்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் விநியோகம் தொடங்கியுள்ளது.

PG Court Case Detail

           இன்று பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தொடரப்பட்டுள்ள P.G வழக்கு நீதியரசர் வைத்தியநாதன் முன்பாக விசாரனைக்கு வருகிறது.வரிசை எண் 71ல் பட்டியலிடப்பட்டுள்ளது.

TNPSC & TET & VAO Useful Study Materials

Group 1&2 - Schedule 5
  •  TNPSC VAO & Group 4 Complete Study Material - Click Here

ஈஎஸ்எல்சி தேர்வெழுதும் தனித்தேர்வர்கள் கவனத்துக்கு..

                    


           ஈஎஸ்எல்சி பொதுத் தேர்வு செப்டம்பர் 2014 - தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.


இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு ..........தற்போதைய நிலை....

       TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-இது வரை நீதிபதியிடம் கையொப்பம் ஆக வில்லை . தீர்ப்பு ஆணை நீதிபதி . திரு .ராமநாதன் அவர்களிடம் கையொப்பம் பெற அவரது சேம்பர்க்கு செவ்வாய் கிழமை ( 16-09-2014 ) அனுப்பப்பட்டு உள்ளது.
 

ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை பட்டதாரி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு

             ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு செய்து இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: பட்டதாரி ஆசிரியர் பணி இடத்தில் வெயிட்டேஜ் முறை நடைமுறைப்படுத்தபட்டது குறித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
 

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு நாளை இறுதி விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பு

                     பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணை பட்டியலில் 370ஆக பட்டியலிடப்பட்டதால் விசாரணைக்கு எட்டவில்லை. ஆகையால் அரசு சார்பில் விசாரணையை விரைவில் முடித்து தீர்ப்பு வழங்க கோரி நாளை விசாரணை பட்டியலில் வரிசை எண்.20க்குள் வழக்கை கொண்டு வர நீதியரசரை கோரியுள்ளது.

கணித விளையாட்டு!

62 - 52 = 11
562 - 452 = 11 11

தகுதி தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

                கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும்.

பி.எட் மாணவர் சேர்க்கை பல்கலை புது கட்டுப்பாடு

              பிஎட் கல்வி பயில புரவிஷனல் சான்று கட்டாயம் இணைக்க  வேண்டும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  பட்டப்படிப்பை தொடர்ந்து ஆசிரியர் பணிக்கு பிஎட் ஒரு வருட  பட்டப்படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆசிரியர் கல்வியியல்  கல்லூரிகளில் நடப்பு (2014-15) கல்வி ஆண்டிற்கான பிஎட் படிப்புக்கு  பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள்  தொடங்கி உள்ளன. 
 

64 வகையான பதிவேடுகள்; ஆசிரியர்கள் குமுறல்

              அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளி பராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.தமிழகத்தில் 36 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், மாணவர்கள் நலன் கருதி, பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போல், உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றன.

ஆராய்ச்சி விருதுக்கு விண்ணப்பிக்க கல்லூரி ஆசிரியர் தயங்குவது ஏன்?

            பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பில் பல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கு 'ஆராய்ச்சி விருது' வழங்கப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தேசிய அளவில் நூறு பேர் விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.தேர்வாகும் ஆசிரியர்கள் மாநில அரசிடம் இருந்து விடுவிக்கப்பட்டு இரு ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவர். அவர்கள் தங்கள் கல்லூரி அல்லது பல்கலை என எங்கு வேண்டுமானாலும் ஆராய்ச்சியில் ஈடுபடுவர். இதற்காக அவர்களுக்கு கலைப்பிரிவு ஆசிரியர் எனில் ரூ. 2 லட்சம், அறிவியல் ஆசிரியர் எனில் ரூ.3 லட்சம் மற்றும் இரு ஆண்டுகளுக்கான முழுச்சம்பளம், சம்பள உயர்வு வழங்கப்படும்.

நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை பல்கலையின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு

                 நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்த மாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, டில்லியில் நடந்த, கல்வித் துறை அதிகாரிகள் கூட்டத்தில், முதல்கட்ட விவாதம் நடந்துள்ளது.

வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயார்: ஓரிரு நாளில் வினியோகம்

                தமிழகத்தில், புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, ஓரிரு நாளில் துவங்க உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின்போது, வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில், ஏராளமானோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான, 12 லட்சம் பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக் கல்வியும்… ச.சீ.இராசகோபாலன்

         நெடுஞ்சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் எப்போதும் கூட்டம். ஆவி பறக்கும் கொதிநிலையில், பித்தளை டபரா-டம்ளரில் காபி வழங்கப்பெறும். அசல் பித்தளையல்ல, பித்தளை வண்ண முலாம் பூசப்பட்டுள்ள பாத்திரங்கள்.

அபராதத்துடன் வருமான வரி செலுத்த வேண்டும்; அரசு ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்'

          அரசுப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை, முறையாக செலுத்தாததால், அபராதத்துடன் வருமான வரியை செலுத்த வேண்டும்' என, வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்புவதால், அரசுப்பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருமான வரி செலுத்த வேண்டும். இந்த தொகையை, மோடி தலைமையிலான புதிய அரசு, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

ஆசிரியர்கள் புரிதலுடன் கூடிய கல்வி கற்பிக்க வேண்டும்; இயக்குனர் வலியுறுத்தல்

              "புரிதலுடன் கூடிய கல்வி அறிவை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்," என தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் வலியுறுத்தினார். மதுரையில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கற்றல் அடைவுதிறன் மேம்படுத்துதல் பயிற்சி முகாமை நேற்று துவக்கி வைத்து அவர் பேசியதாவது: மாணவர்களுக்கு எளிய முறையில் எழுத்தறிவை வளர்க்கும் வகையில் கற்பித்தல் பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு புதிய வார்த்தைகளை கற்பிக்கும் போது, அதன் அர்த்தத்தை மாணவர்கள் மனதில் பதியும் வகையில் விளக்க வேண்டும்.
 

எம்.பி.ஏ. படிக்க விரும்புவோருக்கான 5வது சிறந்த நாடு இந்தியா!

            எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விருப்ப நாடுகளில், இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த வரிசையில், முதலிடத்தில் அமெரிக்கா வருகிறது. அதற்கடுத்து, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஹாங்காங், ஜெர்மனி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகள், முதல் 10 இடங்களுக்குள் வருகின்றன.

செல்போன் மூலம் குழந்தைகளுக்கான “தடுப்பூசி” தகவல்கள்!

              பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National Vaccine Remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும்?

10, 12 தேர்வுகளில்அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை

            10, 12 தேர்வுகளில்அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை: LIC , INDIAN OIL அறிவிப்பு

12th Latest Study Material

Accountancy
  1. Accountancy 5 Mark Important Questions - English Medium
Commerce
  1. Commerce 5 Mark & Important Questions - English Medium
Prepared by Mr. T. VIMALRAJ, M.Com, MBA, B.Ed.,
Economics
  1. Economics - Book Back Questions - Tamil Medium
Thanks to SATHYA Xerox & Browsing Centre.

Festival advance Form download

பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/- 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive