தமிழக அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் 2994 ஜிடிஎஸ் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட இருக்கின்றன. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜிடிஎஸ் வேலை வாய்ப்பு விவரம்
- வேலை வாய்ப்பு: தமிழக அஞ்சல் துறை
- பணியின் பெயர்: Gramin Dak Sevaks (GDS)
- காலிப் பணியிடங்கள்: 2994
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.08.2023
- விண்ணப்பிக்கும் முறை:Online
காலிப்பணியிடங்கள் விவரம்: 2994
UR - 1406, OBC - 689, SC - 492, ST - 20, EWS - 280, PWDA - 22, PWDB - 38, PWDC - 31, PWDDE - 16,
GDS கல்வி தகுதி:
கணிணி மற்றும் ஆங்கிலத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளூர் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
மற்ற தகுதிகள்
- கணினி அறிவு
- சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்.
வயது:
23.08.2023 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
GDS சம்பள விவரம்:
BPM - ரூ.12,000/- முதல் ரூ.29,380/-
ABPM/DakSevak - ரூ.10,000/- முதல் ரூ..24470/-
Gramin Dak Sevaks (GDS) தேர்வு செயல் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
GDS விண்ணப்ப கட்டணம்:
- GEN/OBC/EWS - ரூ.100/-
- SC/ST/PWD/Ex-servicemen - விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் 03.08.2023 முதல் 23.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...