Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.


பணிநிரவல் கவுன்சிலிங்
1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளிசனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள்செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
இடமாறுதல் கவுன்சிலிங்
3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்
பதவி உயர்வு கவுன்சிலிங்
6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம்,கணிதம்அறிவியல்சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்

Proceeding publish in soon...

பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் வேறு எங்கும் பணியாற்ற முடியாத வகையில், அவர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது



     பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் வேறு எங்கும் பணியாற்ற முடியாத வகையில், அவர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும். நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த உத்தரவை அமல்படுத்த பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு / அரசு உதவி பெரும் உயர் நிலை பள்ளி மற்றும் மேல் நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு கீழ் கண்ட வகைகளில் கல்வி உதவி தொகை வழங்க பள்ளி கல்வி இயக்குனரகத்தில் இருந்து விவரம் கோரப்பட்டு உள்ளது.





  1. சமஸ்கிருதம் பயிலும் 9,10,11,12 மாணவர் விவரம்.
  2. இலங்கை அகதிகள் தவிர்த்து ஏனைய அகதிகளின் மாணவ குழந்தைகள்  விவரம் 
  3. இராணுவ பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை வழங்குதல் சார்பு.
  4. முன்னால்  இராணுவ பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை வழங்குதல் சார்பு.

CPS - Mode of Recovery GO

மதிப்பெண் சான்றுகளில் திருத்தம் கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு


     10ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதி, பெயர், தந்தை பெயர், இன்ஷியல், ஜாதி போன்றவைகளை பள்ளி நிர்வாகங்கள் மாற்றம் செய்யக் கூடாது.

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம்


        பி.எட்., - ஆசிரியர் பயிற்சி டிப்ளமா உள்ளிட்ட படிப்புகளுக்கு, கல்லூரிகளுக்கு தகுந்தாற் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு, கட்டணத்தை முறைப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட தனியார் பி.எட்., கல்லூரிகள்; 600 தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரே சீரான வகையில் கட்டணம் இல்லை. கல்லூரிகளுக்கு ஏற்றாற்போல், வெவ்வேறான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு


         பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:  வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை (2010-11) நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஜூலை 1-ம் தேதி மீண்டும் கலந்துகொள்ளலாம்.  இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை நகல் எடுத்தும் கலந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆதி திராவிட நகர்ப்புற மாணவிகளுக்கும் ஊக்கதொகை


         பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளாக கிராமப்புற பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முடித்து, ஆறாம் வகுப்பில் சேரும் ஆதிதிராவிட மாணவிகளுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

ஏழ்மையினால், படிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், நடப்பு ஆண்டு முதல் கிராமப்புற ஆதிதிராவிட மாணவிகள் மட்டுமின்றி, ஆறாம் வகுப்பில் சேர்ந்துள்ள ஆதிதிராவிட நகர்ப்புற மாணவிகளுக்கும் ஊக்கதொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தை வரவேற்ற, பழைய மாணவர் சங்கத்தினர்,தொகை உயர்த்தி வழங்கினால், மேலும் பயனுள்ளதாக இருக்கும் என அரசை வலியுறுத்தி உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 (TNTET 2012) - அனைத்து மாணவர்களின் தேர்வு மைய விவரம்- Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Venue wise Individual Query for the Candidate



Tamil Nadu Teacher Eligiblity Test 2012
 I. List of Admitted candidates                                      -        656088
Date of Examination: 12.07.2012 Thursday
Paper I Timing: 10:30 A.M to 12 Noon
Paper II Timing: 02:30 P.M to 04:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.


           அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று 25.06.2012 நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பணியிடங்களின் காலிப்பணியிட அறிக்கை, மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலிலுள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களைவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது இரட்டைப் பட்டங்கள் குறித்து சர்ச்சை பெரிய அளவில் உருவாகியுள்ளதால் அதுகுறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் அரசாணை எண்.15ன்படி உருவாக்கப்பட்ட 1267 பணியிடங்களை பதவிஉயர்வு கலந்தாய்வில் காட்டுவதா என்பதை குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றும் மேலும் இந்த அரசாணை சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வி துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்


         அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.
வாரத்திற்கு 10 பாட வேளைகளில், நீதி போதனை பாட வேளைகள் ஒதுக்கீடு செய்து கொள்வர். இந்த பாட வேளைகளில் கற்பித்தல் பணிகளை பலர் செய்வதில்லை. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் மணி விடுத்துள்ள சுற்றறிக்கையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாரத்திற்கு 10 பாட வேளை, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை தவறாது செய்ய வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளனரோ அந்த பாடத்தில் குறைந்தபட்சம் எட்டு பாட வேளைகளாவது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மீதி இரண்டு பாட வேளைகள், நீதி போதனை போன்ற பாடங்களை கற்பித்துக் கொள்ளலாம். இதை, அனைத்து தலைமை ஆசிரியர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive