Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

           தமிழக அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு எற்கெனவே நடைமுறையில் இருந்த '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியமனம்' முறை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். 

பொது கலந்தாய்வு நாளை முடிகிறது: என்ஜினீயரிங் காலி இடங்கள் ஒரு லட்சத்தை தாண்டுகிறது

பொது கலந்தாய்வு நாளை முடிகிறது: என்ஜினீயரிங் காலி இடங்கள் ஒரு லட்சத்தை தாண்டுகிறது
தமிழகத்தில் உள்ள 539 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த 1–ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் கவுன்சிலிங் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மாணவ–மாணவிகளிடம் ஆர்வம் குறைந்து வரும் நிலையில் மொத்தம் உள்ள 2 லட்சத்து ஆயிரத்து 861 இடங்களில் நேற்று வரை 89,141 பேர் இடங்களை தேர்வு செய்து ஒதுக்கீட்டு கடிதங்களை பெற்றுள்ளனர். 38,168 பேர் கலந்தாய்வில் பங்கேற்காமல் வேறு படிப்புக்கு சென்று விட்டனர்.

DEE - PAY CONTINUATION FOR 1610 SEC.GR.TEACHERS

முதன்மை கல்வி அலுவலகங்களில் சட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

         :"மாநிலத்தில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களில் சட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என, தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சவுரிஅருணாசலம் தெரிவித்தார்.
 

நினைவுத் திறனை அதிகரிக்கிறதா ஆழ்ந்த இரவு தூக்கம்?


நினைவுத் திறனை அதிகரிக்கிறதா ஆழ்ந்த இரவு தூக்கம்?

       இரவு தூக்கத்தை ஏன் தவிர்க்க கூடாது? என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களுடன் புதிய காரணம் ஒன்றும் சேர்ந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றின் படி ஆழ்ந்த இரவு தூக்கம் மனிதர்களின் நினைவுத் திறனை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

15 வயதில் முதுகலை பட்டம் பெற்று பிஎச்டி சேர்ந்துள்ள சிறுமி

    லக்னௌவைச் சேர்ந்த சுஷ்மார் வர்மா (15) என்ற சிறுமி, முதுகலை பட்டப்படிப்பு முடித்து தற்போது பிஎச்டி ஆய்வுப் படிப்பில் சேர்ந்து சாதனை படைத்துள்ளார்.
எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜியில் முதல் ரேங்கில் சுஷ்மா தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவிலேயே, மிகவும் குறைந்த வயதில் பிஎச்டி படிப்பில் சேர்ந்துள்ள சிறுமி என்ற பெருமையை சுஷ்மா வர்மா பெற்றுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநரின் மகன் சிஏ தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தல்

  மகாராஷ்ட்ரா மாநிலம், கல்யாண் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவரின் மகன் பட்டயக் கணக்காளர் (CA) தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கடந்த மே மாதத்தில்  நடைபெற்ற பட்டய கணக்காளர் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், இந்திய கணக்காளர் நிறுவனத்தில் படித்து வந்த மாணவர் சச்சின் தூபே முதன் முறையிலேயே பட்டயக் கணக்காளர் (CA) தேர்வை வெற்றிகரமாக முடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

சென்னை கணித அறிவியல் நிலையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி

       இந்திய அரசின் அணுசக்தி துறையின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் (The Institute of Mathematical Science)  ஒரு வருட Administrative Trainees பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 2013-14 மற்றும் 2014-15-ம் கல்வி ஆண்டுகளில் படித்து முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது?: தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பரபரப்பு

      பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள், பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கேரளாவில் நடைபெற்ற ஒரு தேர்வில் மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான போலீசாரின் ஆன்லைன் விசாரணை

        பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் வீடு தேடி வந்து போலீசார் விசாரணை நடத்தும் முறையை மாற்றி ஆன்லைன் விசாரணை முறையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட பணி நவம்பரில் தொடங்கும் என தெரிகிறது.

இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி

      ஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளை  மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து  ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


சமச்சீர் கல்வியை, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாகவோ அல்லது சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தையே, சமச்சீர் கல்வியாகவோ மாற்ற வேண்டும்

       சென்னை ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்கள், 2,815 பேரில், 451 பேர் தேர்வு பெற்றனர். இதில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் பயின்றவர்கள், 418 பேர்; சமச்சீர் கல்வியில் பயின்றவர்கள், 33 பேர். ஆந்திராவில், 3,204 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.


கல்லூரி ஆசிரியர் பணி நேரத்தை நிர்ணயிக்க... அனுமதி:உயர் கல்வி துறை செயலருக்கு யு.ஜி.சி., கடிதம்.

       அரசு மற்றும் அரசு உதவி பெறும் முதுநிலை கல்லுாரிகளில், ஆசிரியர்களின் பணி நேரம் குறித்து, மாநில உயர்கல்வி துறையே முடிவு செய்து கொள்ளலாம்,” என்று யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. 

சுகாதார பணிக்கு எஸ்.எஸ்.ஏ., நிதி:பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்.

        பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., வழங்கும் நிதியை, சுகாதார பணிக்கு மட்டுமே  பயன் படுத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சென்னையில் 29-இல் ஆலோசனை

      அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற உள்ளது.

மதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

         தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பள்ளி மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது ரகளை செய்வது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 37 ஆயிரம் பேர்!

       தமிழகத்தில் 37,500 குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது.  அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 37,500 பள்ளி செல்லாக் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

உதவி பேராசிரியர் நியமிக்க உயர் நீதிமன்றம் தடை

        உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சங்கீதா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:-

முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு எதிரொலி : ஓவியம், தையல் பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைப்பு

         ஓவியம், தையல் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை தொடங்கி 3  நாட்களில் பாடத்திட்டம் தயாரிக்க உள்ளது. ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு இதுவரை சரியான பாடத்திட்டம் இல்லை. இது குறித்து மேற்கண்ட பாட ஆசிரியர்கள்  முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தனர். 

பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், பெற்றோரிடம் உறுதிமொழிப்படிவம் வாங்க வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு

        ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,  மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வுக்கு முன்னதாக பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர்,  உள்ளிட்ட சரியான தகவல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகரித்து தேர்வுத்துறைக்கு அனுப்புவார்கள். 

ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டாயம்:தற்செயல் விடுப்புக்கு அனுமதி மறுப்பு.

        அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி மறுத்து, மாநில திட்ட இயக்குனர் எச்சரித்துள்ளார். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளுக்காக மட்டும், கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.

பள்ளி வாகனங்கள் பராமரிப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

        தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் 1,101 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவதில் தனியார் மெட்ரிக். பள்ளி நிர்வாகங்கள் அலட்சியம்

         சிறுபான்மை இன மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித் தொகையை பெற்றுத் தருவதில் தனியார் மெட்ரிக். பள்ளிகள் அலட்சியம் காட்டி வருவதாக பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

"80 சதவீதத்தினருக்கு ஹெபடைட்டிஸ் - சி அறிகுறிகளே தெரியாது'

      ஹெபடைட்டிஸ் சி வைரஸ் பாதித்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு 6 மாதங்களுக்குப் பிறகுதான் நோய்க்கான அறிகுறிகளே தென்படும் என டாக்டர் பாசுமணி தெரிவித்தார்.
 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர்

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் சி. திருச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு ஆக., 1ல் 2ம் கட்ட கவுன்சிலிங்

         தமிழகத்தில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 1ம் தேதி நடக்கிறது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட, 530க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரி களில், பி.இ., - பி.டெக்., படிப்பு களுக்கான பொது கவுன்சிலிங், நாளை முடிகிறது.

இன்று எம்.சி.ஏ., பொதுப்பிரிவு கலந்தாய்வு

        எம்.சி.ஏ., படிப்பிற்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று துவங்கியது. சிறப்பு பிரிவின் கீழ், ஒரு மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு பெற்றுள்ளார். 
 

CEO & DEO Meeting

          பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 29.07.2015 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive