NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதன்மை கல்வி அலுவலகங்களில் சட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

         :"மாநிலத்தில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களில் சட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என, தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சவுரிஅருணாசலம் தெரிவித்தார்.
 
         மதுரையில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் 1981ம் ஆண்டு அடிப்படையில் ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வி பணியாளர் நியமிக்கப்பட்டனர். ஆண்டிற்கு ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் நியமனம் நடக்கும் நிலையில் அதற்கேற்ப பணியாளர்கள் நியமனம் இல்லை. இதனால் பணிகள் தேங்குகின்றன. 385 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் 52ல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் இல்லை. தலா ஒரு கிளார்க், உதவியாளர், தட்டச்சரே உள்ளனர். தேர்வுத் துறை தனியாக பிரிக்கப்பட்டாலும் அத்துறை பணிகளையும் கல்வி பணியாளர்கள் தான் கவனிக்கின்றனர்.

எனவே ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
கருணை நியமனத்தில் 648 பணியிடங்களை வரன்முறை செய்யவேண்டும். தேங்கிக் கிடக்கும் கல்வித்துறை வழக்குகளுக்கு தீர்வுகாண அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் சட்ட அலுவலர்கள் பணியிடங்கள் உருவாக்க வேண்டும்.
ஆக., 1ல் ஆசிரியர் கலந்தாய்வு துவங்கவுள்ளது. அதை அடுத்து வழக்கமாக நடக்கும் அமைச்சு பணியாளர்கள் பணிமாற்றத்தில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றார். பொருளாளர் துரைப்பாண்டி உடனிருந்தார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive