NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜாக்டோ' அமைப்பை தடை செய்ய கோரிக்கை.

        'ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பை, தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, கோரிக்கை விடுத்துள்ளது.

              இதன் மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ், முதல்வர் அலுவலகத்தில், கொடுத்துள்ள மனு:அரசுப் பணியில் இல்லாதவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களின் சங்க விவகாரங்களில், தொடர்பு வைத்திருக்கக் கூடாது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் முத்துச்சாமி மற்றும் கவுரவ பொதுச்செயலர் அணணாமலை ஆகியோர், ஆசிரியர் சங்கங்களின் தலைமை நிர்வாகிகளாக, செயல்படுகின்றனர். மேலும், அவர்கள் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராகவும், தி.மு.க.,வின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்பு செயலர்களாகவும் இருக்கின்றனர்.மூன்றுபேரும், தி.மு.க.,வினரின் துாண்டுதல்பேரில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை, தமிழக அரசுக்கு எதிராக, போராடத் துாண்டி விடுகின்றனர்.கடந்த, நான்கு ஆண்டு களில் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு சலுகைகள் வழங்கியதற்கு, மூன்று பேரும், நன்றி தெரிவிக்கவில்லை. இப்போது, மூன்று பேரும், சில ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, 'ஜாக்டோ' என்னும் அமைப்பை உருவாக்கி, தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த, ஆசிரியர்களை துாண்டி வருகின்றனர். பள்ளிக்குச் சென்று, அழைப்பு விடுக்கின்றனர்.எனவே, அரசுப் பணியில் இல்லாதவர்கள் தலைமையில் செயல்படும், ஆசிரியர்கள் சங்கங்களின், அங்கீகாரத்தை, உடனே ரத்து செய்ய வேண்டும். இவர்கள் தலைமையில் செயல்படும், 'ஜாக்டோ' அமைப்பை, தடை செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.




9 Comments:

  1. ஐயா ஆரோக்கியதாஸ் அவர்களே வாங்கிய கூலிக்கு மேல கூவுறீங்களே..போதும் ..எஸ்மா, டெஸ்மா வால் பாதிக்கப்பட்டதும், சிபிஎஸ் காரர்களின் அவல் நிலையும்,தொகுப்பூதிய காலத்தில் பணியாற்றியவர்களின் மனவேதனையும் தங்களுக்கு தெரியாதா? கிராமப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு..”குலத்தைக் கெடுக்க வந்தக் கோடாரிக் காம்பு” என்று.. இ ந் நேரத்தில் அதை நினைவூட்ட் விரும்பவில்லை.

    ReplyDelete
  2. உன்னோட பெயர் அம்மாவுக்கு தெரியப்படுத்த ரொம்ப கஷ்டபடுரிங்க பாவம், இதெல்லாம் அம்மா அவர்களிடம் எடுபடாது.

    ReplyDelete
  3. ஆரோக்கிய தாஸ் அண்னண் சுயநினைவில் தான் இருக்கிறாரா?

    ReplyDelete
  4. வெளிப்படையாகவே சொல்கிறேன் இவரு முழு கிறுக்கன்...ஆசிரியர் இன துரோகி...

    நமக்குள் சங்க வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம் ஆனால் அதனை நடுவீதியிலா தம்பட்டம் அடிப்பது...

    இவரது சங்க கொள்கை தான் என்ன?

    புண்ணியவான் ஐயா ஆரோக்கியதாஸ் கொஞசம் விளக்கம் சொல்லுங்க...

    அவரு இல்லன அவரோட சங்கத்தை சார்ந்தவங்க சொல்லுங்க.....

    ReplyDelete
  5. அ.தி.மு.க வின் கைகூலி தான் இந்த ஆரோக்கியதாஸ்.....
    கொள்கைக்கு கோரிக்கை வைக்காத இவர் அடுத்தவர் சங்க தடைக்கு கோரிக்கை வைக்க வெட்கமாயில்லை...
    இப்படிக்கு
    பி.இராஜலிங்கம் புளியங்குடி

    ReplyDelete
  6. ஆரோக்கிய தாஸ் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடுவதை நிறுத்திவிட்டு ஒழுங்கா மாணவர்களுக்கு பாடம் நடத்த பிரதமர்-ட்ட கோரிக்கை வைக்கப்போரேன் ....

    நாங்களும் கொஞ்சம் யோசிப்போம்....

    By...
    பி.இராஜலிங்கம் புளியங்குடி

    ReplyDelete
  7. இவனுக்கெல்லாம் கமெண்ட் போட்டு பெரியாளாக்காதீர்கள்.!

    ReplyDelete
  8. Arokyadoss statement is 100% TRUE

    ReplyDelete
  9. ஆரோக்கியதாஸ் அவர்கள் மட்டும் அல்ல அவர் குறிப்பிடும் ஜாக்டோ அமைப்பில் உள்ள 3 பேர் உட்பட யாரும் ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களின் நலனுக்கோ உழைத்தது இல்லை என்பது உண்மை ஜாக்டோ அமைப்பில் உள்ள தலைவர்களின் மகன் மகள் பேரன் இவர்கள் அரசுபள்ளியில் படிக்கவும் இல்லை பிறகு எப்படி அரசு பள்ளி மாணவர்களின் நலனை பார்ப்பார்கள் எல்லாம் நாடகம் சக ஆசிரியர்களிடம் (நண்கொடை) காசு பறிக்க போடும் நாடகம் எனவே இவர்கள் நாடகம் எத்தனை நாள் நடிப்பார்கள் பள்ளிகளில் சில நாட்களில் பிள்ளைகள் இருக்கமாட்டார்கள் என்றால் ஆசிரியரும் இல்லை எந்த சங்கமும் இல்லை இனி தனியார் பள்ளிகளே வாழும் இதை கூட அறியாமல் பிரச்சனை செய்கிறார்கள் சிலர் ஜாக்டோ போன்ற சில அமைப்புகள் ஒரு சில கட்சிகளுக்கு சால்ரா போடும் சங்கங்களே............

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive