NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காந்தி வரிசையில் கலாம்!

       நாட்டிற்காக, தன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்து, 24 மணிநேரமும் மாணவர்களுக்காக உழைத்தவர். அவரது கண்டுபிடிப்புகள், உலகம் அழியும் வரை, அவர் பெயர் கூறும். காந்தி, காமராஜர் போல், அனைவரது மனதிலும், கலாம் நீங்கா இடம் பிடித்துவிட்டார். மீண்டும் ஒருமுறை அவர் ஜனாதிபதியாகஇருந்திருந்தால், இந்தியா வல்லரசாகி இருக்கும்.பெஜித்தா, பி.காம்.,அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி.
நாட்டை நேசித்தவர்!

நான் பிளஸ் 2 படிக்கும் போது, பள்ளி விழாவில், நேரில் கலாமை பார்த்தேன். அவரது பேச்சு என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. 'வாழ்க்கையில் முன்னேற கனவு காணுங்கள்; அதன் மூலம் உயர்ந்த லட்சியத்தை அடைய படிப்படியாக உழையுங்கள்' என்றார். அவரது பேச்சு, நாட்டிற்காகவும் பாடுபட வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் விதையாக விழுந்தது.
கணேஷ் பாபு, பி.காம்.,கலசலிங்கம் கலை அறிவியல் கல்லுாரி, கிருஷ்ணன்கோவில்
இளைஞர்களுக்காகவே வாழ்ந்தார்!
மாணவர்கள், இளைஞர்களை ஊக்குப்படுத்துவதில், அவருக்கு நிகர் யாரும் இல்லை. இளைஞர்களுக்காகவே வாழ்ந்தவர்.அவருடைய இழப்பு, மாணவர்களாகிய எங்களுக்குபேரிழப்பு. எங்களை வழிநடத்த, இவர் போல் இனி யார் வருவார் என, எண்ண தோன்றுகிறது. அவரது அறிவுரைகளைபின்பற்றி நடப்போம். நர்மதா, பிளஸ் 2தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive