NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விண்டோஸ்-10 பதிப்புக்கு அமோக வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர்


விண்டோஸ்-10 பதிப்புக்கு அமோக வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர்

      மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ்-10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர்.

          கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 பதிப்பு நேற்று முன்தினம் வெளியானது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை அடுத்து விண்டோஸ்-10 பதிப்பை விண்டோஸ்-7, 8 மென்பொருட்களைக் கொண்ட கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் விண்டோஸ்-8.1 பதிப்பை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துபவர்கள் உட்பட வெளியான இருபத்துநான்கு மணி நேரத்துக்குள் சுமார் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கத் துவங்கியுள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

விண்டோஸ்-7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ்-8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ்-9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் வெளியான விண்டோஸ்-10 பதிப்பு பல்வேறு வகையான நவீன அம்சங்களுடன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive