NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களும் கலாமும்

          விஞ்ஞானி, ஏவுகணை மனிதன், ஜனாதிபதி உள்ளிட்ட பல பெருமைகளுக்கு கலாம் சொந்தக்காரர் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்பதே இவரது விருப்பமான பணியாக இருந்தது என சொல்லாம். இந்தியாவில் பல்வேறு மொழி, இனம் இருந்தாலும் தேசம் முழுவதும் உள்ள மாணவர்களின் ரோல்மாடலாக தன்னை உயர்த்திக் கொண்டார். 

             அப்துல்கலாம் மறைவுச் செய்தியைக் கேட்ட, அசாமைச் சேர்ந்த அன்வேஷா ராய் என்ற 14 வயது மாணவி கூறியதாவது; 'அசாமின் கவுகாத்தி நகரில் 4 ஆண்டுகளுக்கு முன் குளிர்கால காலை நேரத்தில் என் காதுகளை என்னாலேயே நம்ப முடியவில்லை. காரணம் அப்பள்ளியில் அப்துல்
கலாமுடன் உரையாடும்10 மாணவர்களில் தன்னையும் தேர்வு செய்திருக்கின்றனர்என்பது தான். கலாம் எங்களிடம் விஞ்ஞானியாகவோ, முன்னாள் ஜனாதிபதியாகவோ பேசவில்லை. ஒரு நண்பனைப் போல உரையாடினார். பெரிய அளவில் கனவு காண வேண்டும்; அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறினார். இந்த அன்வேஷா ராயைப் போல தான் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியவர் கலாம். அவர்களிடம் கனவு காண வேண்டும் என்ற வேட்கையை விதைத்தவர். கலாம் நாடு முழுவதும்உள்ள அனைத்துப்பகுதிமாணவர்களிடமும், தனது பேச்சு, புத்தகம், உரையாடல் என எதாவது ஒரு வழியில் கலந்துரையாடி உள்ளார்.


கடந்தாண்டு ஒரு இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'நவீன இந்தியாவின் முக்கிய பலமே நம் இளைஞர்கள் தான். உலகில் எந்த நாட்டிலும் 60 கோடி இளைஞர்கள் இல்லை. அவர்களது சிந்தனையை, ஆக்கப்பூர்வமான வழியில் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அது பூமியை பற்றியதாக இருந்தாலும், பூமிக்கு மேல் உள்ளதைப் பற்றியதாக இருந்தாலும், பூமிக்கு கீழே உள்ளதைப் பற்றியதாக இருந்தாலும் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார். 

அப்துல் கலாம் மாணவர்களிடம் தன் எண்ணங்களை அவர்களுக்கு புரியும் விதத்தில், மிக எளிமையாக சொல்லும் ஆற்றல் படைத்தவர். அது ஐ.ஐ.எம்., மாணவர்களாக இருந்தாலும் சரி, துவக்கப்பள்ளி மாணவர்களாக இருந்தாலும் சரி. மாணவர்களை கேள்விகேட்க வைத்து, அதற்கு மிக பொறுமையாகவும் அதே நேரத்தில் மிகச்சரியானபதிலையும் வழங்குவார். மாணவர்களின் கேள்விக்கு 'இல்லை' என்ற பதிலை ஒருமுறை கூட சொன்னதில்லை. 15, 16 மற்றும் 17 வயதுகளில் தான் மாணவர்களின் கனவு காணும் வயது. இந்த வயதில் தான், மாணவர்கள் தான் எதிர்காலத்தில் டாக்டராகவோ, இன்ஜினியராகவோ, அரசியல்வாதியாகவோ அல்லது தான் நிலவு அல்லது செவ்வாய்க்கோ பயணம் செய்ய வேண்டும் என்றோ கனவு காண்பார்கள். எனவே இந்த வயதில்மாணவர்களுக்கு சரியான வழிகாட்டி அமைய வேண்டும். மாணவர்களும் அந்த கனவை அடைய விடாமுயற்சியோடு உழைக்க வேண்டும் எனஅடிக்கடி கூறுவார். 

கலாம் அடிக்கடி பள்ளிஅல்லது கல்லுாரி மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக்கி கொண்டார். அவர்களிடம் அறிவியல், தொழில்நுட்பம், வாழ்க்கை ஆகியவற்றை பற்றி கலந்துரையாடுவார். அதே போல '2020ல் இந்தியா வல்லரசாக வேண்டும்' எனில், மாணவர்கள் அதற்காக உழைக்க வேண்டும் என அடிக்கடி கூறுவார். ஒரு விஞ்ஞானி தன்னிடம் இந்தளவுக்கு இறங்கி வந்து பேசுகிறாரே என்ற ஆர்வத்தில் மாணவர்களும், அவருடன் பேசுவதற்கு போட்டி போட்டனர். கடந்த 15 ஆண்டுகளில் 1.8 கோடி மாணவர்களிடம் நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ கலந்துரையாடி உள்ளார். அதே போல இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அதிகளவிலான மாணவர்கள் கூடுவார்கள். 

ஒருமுறை ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் ஏற்படும் வகையில் மாணவர்கள் கூடிவிட்டனர். பாதுகாப்பு வீரர்கள் வந்து ஒழுங்குபடுத்தும் அளவுக்கு மாணவர்கள் வந்திருந்தனர். சுவாமி விவேகானந்தருக்குப்பின், இளைஞர்களின் சக்தியை உணர்ந்தவர் டாக்டர் அப்துல்கலாம்.

உலகை கவர்ந்த பேச்சு:

இந்திய ஜனாதிபதியாக அப்துல் கலாம் இருந்தபோது, 2007ல் ஐரோப்பிய பார்லிமென்ட் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதன் சுருக்கம்: “ஐரோப்பிய யூனியன் பொன் விழாவை முன்னிட்டு, ஐரோப்பிய பார்லிமென்ட்உறுப்பினர்களின் முன்பு நின்று பேசுவதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த நேரத்திலேயே மூன்றாயிரம்ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியமான புறநானுாற்றில் தமிழ் புலவர் கணியன்பூங்குன்றனார் சொன்னதை நினைவுகூர்கிறேன். அவர் சொன்னார், “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” என்று. இதற்கு அர்த்தம், நான் இந்த உலகக்தின் குடிமகன், அனைவரும் எனது உறவினர்கள்”. இதை மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ்ப் புலவர் கூறிச்சென்றார்.

இந்தியாவில் இப்படி கூறுவோம்: எங்கு இருதயத்தில் நேர்மை இருக்கிறதோ அங்கு தான் குணத்தில் அழகு இருக்கும். எங்கு குணத்தில் அழகு இருக்கிறதோ அங்கு வீட்டில் அமைதி இருக்கும். எந்த வீட்டில் அமைதி இருக்கிறதோ அந்த நாட்டில்ஒழுங்கு இருக்கும். எந்த நாட்டில் ஒழுங்கு இருக்கிறதோ உலக அளவில் அமைதி இருக்கும். “ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே, ஐரோப்பிய யூனியன் பெயரில்உங்களது முக்கியத்துவம் வாய்ந்த, சிறப்பான உரைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை நாங்கள் கேட்டதிலேயேஇது ஒரு பிரமாதமான உரை. ஒரு ராஜதந்திரி, ஒரு விஞ்ஞானி. இரண்டும் சேர்ந்து இருப்பது மிகவும் அரிதானது. இந்தியா என்ற சிறந்த நாட்டுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான நட்புறவுக்கும் வாழ்த்துகள்”




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive