Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

வேளாண் பல்கலை தரவரிசை: 3ம் இடம்பிடித்த ஹோட்டல் சப்ளையரின் மகன்

        தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், ஹோட்டலில் சப்ளையராக இருப்பவரின் மகன் 3ம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த அனைவரும் எம்.பி.பி.எஸ். படிப்பைத் தேர்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் கு.ராமசாமி பங்கேற்று தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டார்.
தரவரிசைப் பட்டியலில் நாமக்கல் எஸ்.தீனேஸ்வர், திருச்சி தட்சிணாமூர்த்தி, ராமநாதபுரம் ஆர்.மனோஜ்குமார் ஆகியோர் தலா 199.75 மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
3வது இடத்தைப் பிடித்த ஆர். மனோஜ்குமாரின் தந்தை ரெங்கசாமி ஒரு ஹோட்டலில் சப்ளையராக பணியாற்றி, தனது மகனை படிக்க வைத்துள்ளார். மனோஜ்குமார் ராமநாதபுரம் மாவட்டம் காவனூரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துள்ளார். இவர் தற்போது எம்பிபிஎஸ் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள் அனைவருமே மருத்துவப் படிப்பையே தேர்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading