Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

கிடைத்தது எம்.பி.பி.எஸ்., 'சீட்' கட்டணம் செலுத்த வழியில்லை: தேனி மாணவர் தவிப்பு

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவருக்கு, எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் கிடைத்தும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்-கி-றார்.தேனி மாவட்டம், சக்கம்பட்டியைச் சேர்ந்த துணி வியாபாரி தமிழரசன் மகன் லோகேஸ்வரன். இவர், பிளஸ் 2வில், 1,168 மதிப்பெண் பெற்றார். 197.05 'கட்- ஆப்' பெற்-று, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்தது.
விடுதி கட்-ட-ணம்: தந்தை தமிழரசன் கடன் வாங்கி, கல்லுாரி கட்டணம், 12 ஆயிரம் ரூபாயை செலுத்தினார்; விடுதி கட்டணம், 25 ஆயிரம் ரூபாயை செலுத்த வழியின்றி தவிக்கிறார். இவரது சகோதரி ஹம்சலேகா, அழகப்பா பல்கலையில் பி.இ., இறுதி ஆண்டு படிக்கிறார்.
நேற்று தேனி கலெக்டர் வெங்கடாசலத்திடம், லோகேஸ்-வ-ரன் கொடுத்த மனுவில், 'நானும், சகோதரியும் கல்லுாரி, கல்வி கட்டணம், விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்படுகிறோம். எங்கள் கல்விக்கு உதவ வேண்டும்' என, வலியுறுத்தினார்.
இவருக்கு உதவ, 94893 75504 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading